ஒரு திருநங்கைனா இவ்ளோ கீழ்தரமா பேசுவீங்களா – ஷிவின் குறித்து பேசியதால் தனலட்சுமி, ஜனனியை கண்டித்த திருநங்கை தனுஜா.

0
555
thanuja
- Advertisement -

தனலட்சுமி, ஜனனியை கண்டித்து திருநங்கை தனுஜா வெளியிட்டிருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி தற்போது ஆறாவது வாரம் சென்று கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் ஜிபி முத்து, அசீம், அசல், ராபர்ட், ராமசாமி, ஏடிகே, ஜனனி, அமுதவாணன், விஜே மஹேஸ்வரி, விஜே கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரக்சிதா, மணிகண்டன், மெட்டி ஒலி சாந்தி, விக்ரமன், குயின்ஸி மற்றும் நிவாஷினி, சிவின் கணேசன் என 20 பேர் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.

-விளம்பரம்-
biggboss

பின் முதல் வாரத்திலேயே வைல்ட் கார்ட் எண்ட்ரியாக மைனா நந்தினி வந்து இருக்கிறார். இந்த முறை நிகழ்ச்சியை விறுவிறுப்பாக கொண்டு செல்ல பல மாற்றங்களை பிக் பாஸ் கொண்டு வந்து இருக்கிறது. இதனால் போட்டியாளர்கள் ஓவ்வொருவரும் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். மேலும், இந்த நிகழ்ச்சியில் இருந்து இதுவரை ஜிபி முத்து, மெட்டிஒலி சாந்தி, அசல், ஷெரினா,மகேஷ்வரி ஆகியோர் வெளியேறி இருக்கிறார்கள்.

- Advertisement -

சிவின் கணேசன் குறித்த தகவல்:

இது ஒரு பக்கம் இருக்க, இந்த முறை நிகழ்ச்சியில் சிவின் கணேசன் என்ற திருநங்கை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கிறார். இவர் வீட்டுக்கு ஒரே பையன். இவர் திருநங்கையாக மாறியவுடன் இவருடைய விருப்பத்திற்கு வீட்டில் ஆதரவு கொடுக்கவில்லை. இதனால் இவர் வேலை தேடி சிங்கப்பூர் சென்றார். சில ஆண்டுகள் இவர் அங்கேயே இருந்தார். அதற்குப் பின்னர் இவர் மீண்டும் இந்தியா வந்தார். ஆனால், இவர் திரும்பி வந்ததை அவர்களுடைய வீட்டில் ஏற்றுக் கொள்ளவில்லை.

பிக் பாஸ் வீட்டில் சிவின் கணேசன்:

அதோடு இவர் தன்னுடைய அம்மாவை கூட சந்திக்கவில்லை. மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதன் மூலம் இதுவரை தன்னிடம் பேசாத அம்மா பேசுவார் என்று எதிர்பார்த்து இந்த நிகழ்ச்சியில் சிவின் கணேசன் கலந்து கொண்டு இருக்கிறார். இந்த நிகழ்ச்சி ஆரம்பத்தில் இருந்து சிவின் கணேசன் மிகச் சிறப்பாக விளையாடி கொண்டு வருகிறார். இவர் பல அவமானங்கள், கிண்டல்களை சந்தித்தாலும் அதை எல்லாம் எதிர்கொண்டு தைரியமாக விளையாடி வருகிறார்.

-விளம்பரம்-

தனலட்சுமி- ஜனனியின் சர்ச்சை கருத்து:

இப்படி இருக்கும் நிலையில் தனலட்சுமி- ஜனனி இருவரும் சேர்ந்து பேசிக் கொண்டிருக்கும்போது, சிவினுக்கு தலையில் முடி வளருமா? வளராதா? என்று சர்ச்சைக்குரிய கருத்தை பேசி இருக்கிறார்கள். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து இருந்தார்கள். இதை பார்த்து ஆத்திரம் அடைந்த திருநங்கை தனுஜா வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, சிவினுக்கு தலையில் முடி முளைக்குமா? முளைக்காதா? என்று பெரிய டிஸ்கஷன் செய்திருந்தார்கள் ஜனனி – தனலட்சுமி. இது நிறைய திருநங்கை மனதை பாதித்திருக்கிறது. இது எவ்வளவு கீழ்த்தனமான, கேவலமான, அறிவு கெட்ட தனமான பேச்சு.

வீடியோவில் 26 நிமிடத்தில் பார்க்கவும் :

திருநங்கை தனுஜா பதிவிட்ட வீடியோ:

உள்ளே கலருக்காக முகத்தை மாத்தினவர்கள் எல்லாம் வந்திருக்கிறார்கள். அவர்களைப் பற்றி பேசுனீர்களா? மைனா நந்தினி வெள்ளையாக இருக்கிறார். எந்த ஊசி போட்டு அவர் வெள்ளை ஆனார் என்றெல்லாம் பேசினீர்களா? ஒரு பாடி பில்டர் எப்ப பார்த்தாலும் மேக்கப் போட்டுக் கொண்டிருக்கிறார். அவர் ஆணா? பெண்ணா? என்று யோசித்தீர்களா? திருநங்கை மட்டும் என்ன ஊறுகாயா? மற்றவர்களை பேசுவது நாகரீகம் இல்லை என்று கருதுகிற நீங்க எங்க சமுதாயத்தை மட்டும் எப்படி எளிதாக உங்களால் பேச முடியுது. நான் இதை வன்மையாக கண்டிக்கிறேன் என்று கூறி இருக்கிறார்.

Advertisement