ஏன் உங்க புருஷனை விட்டீங்க – பீட்டரின் மனைவிக்கு காஜல் சரமாறி கேள்வி.

0
21882
kajal

நடிகையும் பிக் பாஸ் போட்டியாளர் மான வனிதாவின் மூன்றாம் திருமணம் பற்றிய செய்திகள்தான் தற்போது சமூக வலைதளத்தில் ஹாட் டாப்பிக்காக இருந்து வருகிறது.வனிதா 3-வது திருமணம் செய்து கொண்ட பீட்டர் பவுலுக்கு ஏற்கனவே எலிசபெத் என்ற மனைவியும் 2 பிள்ளைகளும் இருக்கின்றார்கள். ஆனால், எலிசபெத்திற்கு விவாகரத்து கொடுக்காமலேயே பீட்டர், வனிதாவை திருமணம் செய்து கொண்டார் என்று எலிசபெத் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதன் பின்புதான் வனிதாவின் திருமணம் பெரும் சர்ச்சையில் சிக்கியது.

vanitha

ஆரம்பத்தில் இது தனது திருமணம்தான் என்று கூறி வந்த வனிதா எலிசபெத்தின் புகாருக்கு பின்னர் இது திருமணம் கிடையாது வெறும் அன்பின் பரிமாற்றம் மட்டும்தான் என்று அந்தர் பல்டி அடித்தார். இருப்பினும் தனது திருமணம் குறித்து விமர்சிப்பவர்களுக்கு பதிலடி கொடுத்து வருகிறார் வனிதா.ரசிகர்களை போலவே பல பிரபலங்களும் வனிதாவை விமர்சித்து வருகின்றனர்.

- Advertisement -

ஏற்கனவே நடிகை குட்டி பத்மினி, லட்சுமி ராமகிருஷ்ணன் போன்றவர்கள் வனிதாவின் திருமண விஷயத்தில் கருத்து தெரிவித்து இருந்ததனர். ஆனால், வனிதாவின் மிரட்டலால் மன்னிப்பு கேட்டுவிட்டு இந்த விஷயத்தில் இருந்து வெளியில் சென்று விட்டார்கள். இந்த நிலையில் நடிகையும் பிக் பாஸ் போட்டியாளர் காஜல் பசுபதி சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற போது வனிதாவின் திருமண பிரச்சினை குறித்து பேசியிருக்கிறார்.

வீடியோவில் 7 : 40 நிமிடத்தில் பார்க்கவும்

அதில் தற்போது இதுதான் மிகப் பெரிய பிரச்சனையா என்ன ? வனிதா திருமணம் செய்துகொள்வது அவர்களின் தனிப்பட்ட விஷயம். மேலும், அதைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்பதால் அதைப் பற்றி நான் கருத்து கூற முடியாது. அதே போல பீட்டர் பவுலின் மனைவியான எலிசபெத், பீட்டர் குடிகாரன் பொம்பள பொறுக்கி என்றெல்லாம் கூறி வருகிறார். உண்மையில் உங்கள் கணவர் உங்களுக்கு வேண்டுமென்றால் அவரின் நல்ல குணத்தை தான் சொல்ல வேண்டும். இப்படி சொன்னால் என்ன அர்த்தம் . உங்களுக்கு பேருக்கு ஒரு புருஷன் வேண்டுமா என்ன அவர்களுடைய மனநிலை என்ன என்பது எனக்கு புரியவில்லை என்று கூறியிருக்கிறார்

-விளம்பரம்-
Advertisement