எனக்கு அந்தப் பேர் வரக் காரணமே ஆரவ்தான்” – ‘பிக் பாஸ்’ காஜல்

0
2164
Aarav - Kaajal
- Advertisement -

கடந்த வாரம் சனிக்கிழமை முடிந்த ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் வின்னர் ஆரவ். அவரை வின்னராக அறிவித்ததும், உற்சாகமாக கைக்குலுக்கி தன் மகிழ்ச்சியை வெளிபடுத்தியவர், காஜல். ‘பிக் பாஸ்’ வீட்டில் அவர் ரசித்த நபர்கள், சந்தித்த சவால்கள் எனப் பல விஷயங்களைப் பேசினார்.
Kaajal Pasupathi
ஏன் எப்பவும் டான், ரவுடி மாதிரி உங்களைக் காட்டிக்கிறீங்க?

-விளம்பரம்-

ஆரவ் பண்ண வேலைதான் அது. அவர்தான் முதல்ல என்னை ‘டான்’னு கூப்பிட்டார். ‘பிக் பாஸ்’ வீட்டுக்குள் நுழைந்த முதல் நாளிலேயே வெளியில் நடந்த எல்லா விஷயத்தையும் எல்லார்கிட்டயும் உளறிக் கொட்டிட்டேன். உடனே, கன்ஃபெஷன் ரூமுக்கு வாங்கனு கூப்பிட்ட பிக் பாஸ், ‘இனிமே வெளியில நடந்த எதையும் உள்ளே சொல்லக் கூடாது’னு ஸ்ட்ரிக்டா சொல்லிட்டார். அதிலிருந்துதான் வந்த முதல் நாளே கன்ஃபெஷன் ரூமுக்கு போன நீங்கதான் டான்’னு ஆரவ் சொல்ல ஆரம்பிச்சார்.

- Advertisement -

பிக் பாஸ்’ வீட்டில் உங்க டெரர் எதிரி யாரு?

எதிரினு யாருமே இல்லைங்க. ஒருசில பேர் மேல மட்டும் வருத்தம் இருந்தது. முகத்துக்கு நேராகச் செருப்பால அடிச்சாலும் அதை ஏத்துப்பேன். ஆனால், முகத்துக்கு முன்னாடி நல்லாப் பேசிட்டு, பின்னாடி தப்பா சில பேர் பேசியிருந்தாங்க. அதுதான் எனக்கு வருத்தம்.
Kaajal Pasupathi
ரவுடி பட்டம், ஸ்வீட்டி, டார்லிங், புத்திசாலி பட்டம் யார் யாருக்கெல்லாம் கொடுக்கலாம்?

-விளம்பரம்-

ரவுடி பட்டம்.. வேற யாருக்கு? எனக்குத்தான். ஸ்வீட்டி பட்டம் ஓவியாவுக்கு, டார்லிங் பட்டம்னா அது ரைஸாவுக்குத்தான். பிக் பாஸ் வீட்ல புத்திசாலினா அது சினேகன். அவருக்குத்தான் அந்தப் பட்டம்.

ஆரவ் வெற்றிபெற்றதும் ரொம்ப உற்சாகமா கைக்குலுக்கினீங்களே.

டிசர்விங்கான போட்டியாளர் ஜெயிச்சது ரொம்ப சந்தோஷம். அது ஆரவாக இருந்தாலும் சரி, கணேஷாக இருந்தாலும் சரி. அந்த வகையில் ஆரவ் வின் பண்ணது நிஜமாவே சந்தோஷம். ஏன்னா, ஆரவ் என் நண்பன். கணேஷ் வெற்றிபெற்றிருந்தாலும் சந்தோஷப்பட்டிருப்பேன். ஏன்னா, கணேஷ் ஜென்டில்மேன்.
kaajal-questions
பிக் பாஸ்’ நிகழ்ச்சி முடிஞ்சு வீட்டுக்குப் போனதும் என்ன சொன்னாங்க?

என்னடி மூஞ்சில கரியைப் பூசிட்டு வந்திருக்கே’னு சொன்னாங்க. கலாய்க்கிறாங்கனுதான் நினைச்சேன். அப்புறம்தான் தெரிஞ்சுது நான் கருத்துப் போனதை சொல்லியிருக்காங்க. அதுவரைக்கும் சந்தோஷம். வெளியில், வெயிலில்தான் நிறைய டாஸ்க் வெச்சாங்க. மூஞ்சி, தீஞ்சிப் போய்ச்சு. ஏற்கெனவே கறுப்பு அதுலயும் இன்னும் கறுப்பான எப்படியிருக்கும். ஏன் எல்லாரும் சிரிச்சிட்டே இருக்கீங்க.. ஏன் யாருமே திட்டலைனு கேட்டேன். ‘உன்னை காட்டினாதான திட்டுறதுக்கு’னு என் அக்கா சொன்னாங்க.

Advertisement