தென்னிந்திய சினிமா உலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர் நடிகை மேக்னா ராஜ். இவர் சமீபத்தில் தன்னுடைய குழந்தைக்கு பெயர் சூட்டு விழா நிகழ்ச்சி ஒன்று நடத்தி இருந்தார். இது அனைவருக்கும் தெரிந்ததே. இந்நிலையில் நடிகை மேக்னா ராஜ் அவர்கள் கன்னட பிக் பாஸ் டைட்டில் வின்னரை இரண்டாவது முறையாக திருமணம் செய்யப் போகிறார் என்ற வதந்தி சோஷியல் மீடியாவில் வந்துள்ளது. தற்போது இது பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
பிரபல கன்னட நடிகர் சிரஞ்சீவி சர்ஜா என்பவரை நடிகை மேக்னா ராஜ் அவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர் கடந்த ஆண்டு மாரடைப்பு காரணமாக உயிரிழந்த தகவல் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்போது மேக்னா ராஜ் அவர்கள் கர்ப்பமாக இருந்தார். சமீபத்தில் தான் இவருக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது. மேலும், ஜூனியர் சிரஞ்சீவிக்கு ராயன் ராஜ் சர்ஜா என பெயரிட்டப்பட்டது.
அதோடு மேக்னா ராஜ் குழந்தைக்கு பெயர் சூட்டு விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பகிரப்பட்டு வந்தது. இந்த நிலையில் நடிகை மேக்னா ராஜ் அவர்கள் இரண்டாவது திருமணம் செய்ய முடிவு செய்துள்ளதாகவும், கன்னட பிக் பாஸ் டைட்டில் வின்னர் பிரதாமை தனது வருங்கால கணவராக தேர்ந்தெடுத்து உள்ளதாகவும் பல வதந்திகள் சோசியல் மீடியாவில் எழுந்த வண்ணம் உள்ளன.
இதற்கு பிரதாம் அவர்கள் தனது ட்விட்டரில் கருத்து ஒன்று போட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, நான் இதை புறக்கணிக்க நினைத்தேன். ஆனால், இந்த செய்தி 2.70 லட்சத்துக்கும் அதிகமான பார்வையாளர்களை கடந்து உள்ளது. யூடியூப் சேனல்கள் பணத்திற்காக இப்படி தரக்குறைவான செயல்களில் ஈடுபடுவதால் இதற்கு சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்க நான் நினைக்கிறேன். இதுபோன்ற வீடியோக்கள் மீது சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கும் போது தான் மற்ற சேனல்களுக்கும் இது ஒரு பாடமாக அமையும் என்று அவர் பதிலளித்துள்ளார். தற்போது இவர் போட்ட ட்வீட் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.