இன்னும் கொஞ்ச நாள் இருந்திருந்தா – எலிமினேஷனுக்கு பின் அனன்யா வெளியிட்ட முதல் வீடியோ

0
1697
- Advertisement -

பிக் பாஸில் இருந்து வெளியேறிய பின்னர் முதன் முறையாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அனன்யா. தற்போது சோசியல் மீடியா முழுவதும் ஹாட் டாபிக்கே பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி குறித்து தான். அனைவரும் எதிர்பார்த்த பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி கோலாகலமாக கடந்த ஞாயிற்று கிழமை தொடங்கி ஐந்து நாட்களை கடந்து இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு விஜய், ஜோவிகா விஜயகுமார், அக்ஷயா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றனர்.

-விளம்பரம்-

கடந்த வாரம் நடைபெற்ற முதல் வாரத்திற்கான நாமினேஷன் பட்டியில் அனன்யா, ஐசு, பவா செல்லதுரை, ரவீனா, ஜோவிகா, பிரதீப் ஆண்டனி, யோகேந்திரன் ஆகியோர் பெயர்கள் இடம் பெற்று இருக்கிறது. இதுவரை பதிவாகி இருக்கும் வாக்குகளின் அடிப்படையில் வரை குறைந்த அளவு வாக்குகள் பெற்றிருந்தார் அனன்யா. இதனால் இந்த சீஸனின் முதல் ஆளாக பிக் பாஸில் இருந்து வெளியேறினார்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் வெளியேற்றத்திற்கு பின்னர் அனன்யா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘சிறிது காலத்திற்கு தான் அந்த வீட்டில் இருந்தாலும் ரசிகர்கள் பலர் தங்களது ஆதரவை எனக்கு கொடுத்ததற்காக நன்றி. இன்னும் கொஞ்ச நாள் பிக்பாஸ் வீட்டில் இருந்திருந்தால் நிச்சயம் எனக்கு ரசிகர்கள் ஆதரவளித்திருப்பார்கள். தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவருக்கும் நன்றி தெரிவிக்க முடியாததால் இந்த வீடியோவை நான் வெளியிடுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் வீட்டில் இருந்த வரை அனன்யா பெரிதாக சுவாரசியத்தை வெளிப்படுத்தவில்லை. அதே போல மற்ற போட்டியாளர்கள் போல பஞ்சாயத்தையும் கூட்டவில்லை. ஆனால், விசித்ரா அனன்யாவிடம் டாட்டூவை காட்ட சொல்லிகேட்டதாக ஒரு சர்ச்சை வெடித்தது. விசித்ரா அனன்யாவிடம் அவரது இடுப்பில் உள்ள டாட்டூவை காட்ட சொல்ல, அனன்யாவும் காண்பித்து இருக்கார். பின்னர் பவா செல்லதுரை, என் உடலில் போட்டிருக்கும் டாட்டூ பற்றி இந்த வீட்டில் எல்லோருமே பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

-விளம்பரம்-

இன்று காலையில் கூட விசித்திரா அம்மா வந்து என் இடுப்புக்கு பின்னால் இருக்கும் டாட்டூவை காட்ட சொன்னார். ஆனால், என்னுடைய அம்மா டாட்டூகளை யாரிடமும் காட்டக் கூடாது என்று சொன்னார். விசித்திரா எதற்கு கேட்டார்? என்று தெரியும். அதனால்தான் நான் வேண்டுமென்றே காட்டினேன் என்று வருத்தத்துடன் பேசி இருந்தார். இதை தவிர அனன்யா பிக் பாஸில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்துவில்லை.

Advertisement