மறுபடியும் ஜோசப் விஜய்னா சொல்ற, உனக்கெல்லாம் மதத்தை தவிர்த்து வேறு எதுவும் தெரியாதா? திட்டி தீர்த்த ரசிகருக்கு கஸ்தூரி கொடுத்த பதிலடி.

0
503
- Advertisement -

சமீபத்தில் தனது கட்சியின் பெயரை விஜய் அறிவித்ததில் இருந்தே விஜயின் அரசியல் குறித்த செய்தி தான் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் ரசிகர்கள் மன்றம் வைத்து இருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இப்படி இருக்கும் நிலையில் 2020 ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் போட்டியிட்டார்கள். இவர்கள் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றது அரசியல் வட்டாரத்தில் கதிகலங்க வைத்தது. சமீபத்தில் விஜய் அவர்கள் மக்கள் இயக்கத்தின் செயல்பாடுகள் மற்றும் வளர்ச்சிக்கான ஆலோசனை கூட்டத்தை நடத்தி இருந்தார்.

-விளம்பரம்-

இதன் மூலம் விஜய் அரசியல் வருவதற்கு அடுத்த கட்டமாக தான் இதையெல்லாம் செய்கிறார் என்று பலரும் கூறுகின்றனர். அதோடு விஜய் விரைவிலேயே அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் விஜய் தன்னுடைய கட்சிக்கு ‘தமிழக வெற்றி கழகம்’ என்று பெயர் வைத்திருக்கிறார். இந்த பெயரை விஜய் அறிவித்ததில் இருந்து விஜயின் மன்ற உறுப்பினர்கள், ரசிகர்கள் என பலருமே உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

- Advertisement -

இதனை அடுத்து விஜய் அவர்கள் மக்கள் இயக்கத்தின் தலைமை நிர்வாகியான புஸ்ஸி தலைமையில் மன்ற நிர்வாகிகளுடன் இணைந்து தன்னுடைய கட்சியின் பெயரை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்திருக்கிறார்.அதோடு 2024 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் விஜய் போட்டியிடவில்லை. 2026 ஆம் ஆண்டு நடக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக தயாராகுவோம் என்று விஜய் சொல்லியிருக்கிறார்.

இப்படி முழு நேர அரசியலில் விஜய் ஈடுபட இருப்பதால் சினிமாவிலிருந்து விலகுவதாகுவதாகவும் அறிவித்து இருக்கிறார். விஜய்யின் புதிய கட்சிக்கு பல்வேறு அரசியல் பிரபலங்களும் சினிமா பிரபலங்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தனர். அந்த வகையில் நடிகையம் பா.ஜ.க உறுப்பினருமான கஸ்தூரி பேசுகையில் ‘ என்னை போல் சினிமாவில் ரசிகர்களாக இருப்பவர்கள், ரசிகர்கள் என எல்லோருமே ஒட்டுமொத்தமாக ஓட்டு போட்டு இருந்தால் விஜயகாந்த் எப்பவோ முதலமைச்சராகி இருப்பார். கமல் எம்.எல்.ஏ ஆகி இருப்பார். இதெல்லாம் நடக்கவில்லை.

-விளம்பரம்-

மக்கள் யாரை கொண்டு வரலாம் என்றும் தேடிக் கொண்டிருக்கிறார்கள். இப்படி இருக்கும் போது விஜய் எந்த இடத்தில் இருக்கிறார். அதில் அவரே இன்னும் பிட்டாகவில்லை. எனக்கு தெரிந்த பாதிப்பு இல்லாத ஒரே கட்சி பாஜக தான். காவி கொள்கைகள் கொண்டவர்கள் எல்லோருமே பாஜகவிற்கு தான் ஓட்டு போடுவார்கள். ஜோசப் விஜய்க்கு ஓட்டு போட மாட்டார்கள் என்றும் பேசி இருந்தார்.

இப்படி ஒரு நிலையில் ட்விட்டரில் ரசிகர் ஒருவர் ‘எடு செருப்ப நாயே… மறுபடியும் ஜோசப் விஜய்னா சொல்ற… உனக்கெல்லாம் மதத்தை தவிர்த்து வேறு எதுவும் தெரியாதா?? அடேய் குட்டி குஞ்சான்ஸ் இந்த நடிகையை சும்மாவா விட்டிங்க’ என்று கமண்ட் செய்து இருந்தார். இதற்கு பதிலடி கொடுத்த கஸ்தூரி ‘விஜய்யை ஜோஸப் என குறிப்பிடும் கட்சியினர் அவருக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்ற அரசியல் உண்மையை சொல்லியிருக்கேன். என் சொந்த கருத்தை அல்ல. திமுக கூட்டணிக்கு பாதிப்புன்னு சொன்ன உடனே உ.பி கழிசடைங்க எப்படியெல்லாம் மூட்டி விடுதுங்க பாரேன். பொய்யை மட்டும் தான் பேசுவீங்களாடா?’ என்று பதிலடி கொடுத்துள்ளார்.

Advertisement