18 வருஷம் ஆகிடிச்சி, சக்ஸஸ் மீட்ட டிவில தான் பாத்து இருக்கேன், ஆனா – ப்ளூ ஸ்டார் சக்ஸஸ் மீட்டில் பிருதிவிராஜ் உருக்கமான பேச்சு.

0
400
- Advertisement -

தமிழ் சினிமாவில் எத்தனையோ வாரிசு நடிகர்கள் இருந்தாலும் அனைவரும் சினிமாவில் ஜொலிப்பது கிடையாது. அதிலும் சிலருக்கும் வெற்றி என்பது கிடைக்கவே பல ஆண்டுகள் ஆகிவிடுகிறது. அந்தவகையில் பிரபல நடிகர் பாண்டியராஜனின் மகனுக்கு ப்ளூ ஸ்டார் திரைப்படத்தின் மூலம் பல ஆண்டுகள் கழித்து ஒரு அங்கீகாரம் கிடைத்துள்ளது. அறிமுக இயக்குனர் எஸ் ஜெயக்குமார் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் ப்ளூ ஸ்டார். இந்த படத்தை பா ரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்ஷன் தயாரித்திருக்கிறது. இந்த படத்தில் அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன், பகவதி பெருமாள் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

-விளம்பரம்-

கோவிந்த் வசந்த் இந்த படத்திற்கு இசை அமைத்து இருக்கிறார். கிரிக்கெட் போட்டியை மையமாக வைத்து இயக்குனர் கதைக்களத்தை கொடுத்திருக்கிறார். ஊர் தெரு மற்றும் காலனி தெரு மக்களுக்கு இடையே நடக்கும் கிரிக்கெட் போட்டியும் அதனால் ஏற்படும் பிரச்சனை குறித்து தான் படத்தில் பேசப்பட்டிருக்கிறது. அதோடு ஊர் தெரு மற்றும் காலனி தெரு மக்கள் இணைந்தால் என்ன நடக்கும்? என்பதையும் இயக்குனர் படத்தில் காண்பித்திருக்கிறார்.

- Advertisement -

இந்த படத்தில் எதார்த்தமாக படைக்கப்பட்ட ரஞ்சித், ஆனந்தி, ராஜேஷ், சாம் என ‘ப்ளூ ஸ்டார்’ திரைப்படத்தின் பல கதாபாத்திரங்களை மக்கள் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக, சாமின் கவிதைகளுக்கு திரையரங்கத்தில் சிரிப்பும், விசில் சத்தமும் பறக்கிறது.கடந்த 2006ஆம் ஆண்டு தன் அப்பா பாண்டியராஜன் இயக்கத்தில் ‘கைவந்த கலை’ என்ற படத்தில் அறிமுகம் ஆனார்என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் வெற்றி விழா சமீபத்தில் நடைபெற்றது இதில் பேசிய நடிகர் பிரித்திவிராஜ்.சக்சஸ் மீட் என்பதை டிவியில் பார்த்திருக்கிறேன் பேப்பரில் பார்த்திருக்கிறேன் ஆனால் இதுதான் என்னுடைய முதல் சக்சஸ் மீட். இதில் நானும் ஒரு பகுதியாக இருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. 2006 இல் என்னுடைய முதல் படம் வெளியானது. இந்த சக்சஸ் மீட்டை அனுபவிக்க எனக்கு 18 ஆண்டுகள் ஆகிவிட்டது.

-விளம்பரம்-

நான் எப்போது வெளியில் சென்றாலும் பாண்டியராஜ் மகன் என்று தான் சொல்வார்கள் அது எனக்கு சந்தோஷமாகத்தான் இருந்தது ஆனால் ஒரு கட்டத்தில் நமக்கென்று ஒரு அடையாளம் இல்லையே எப்போதும் அப்பாவின் பெயர் சொல்லியே நம்மை அழைக்கிறார்களே என்ற ஒரு வருத்தம் இருந்தது ஆனால் ப்ளூ ஸ்டார் திரைப்படத்தை முடித்து வெளியில் வந்தபோது என் பெயர் கூட யாருக்கும் ஞாபகம் இல்லை அனைவருமே சாம் சாம் சாம் சாம் சாம் என்று தான் சொன்னார்கள்.

எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது அப்போது மீடியா நண்பர் ஒருவர் அவருடைய அப்பா தான் பாண்டியராஜன் என்று சொன்னார் அதை கேட்கும் போது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. எல்லாரும் சொன்ன ஒரு விஷயம் நன்றாக நடித்திருந்தீர்கள் ஒரு நடிகராக முன்னேறி இருக்கிறீர்கள் என்று சொன்னார்கள் இதுபோல கமெண்ட்களை கேட்க மிகவும் சந்தோஷமாக இருக்கிறது’ என்று உருக்கமாக பேசி இருக்கிறார்.

Advertisement