ஏன் உங்கள் கணவரை பற்றிய விவரங்களை சொல்லமாட்றீங்க. ரசிகரின் கேள்விக்கு கஸ்தூரி பதில்.

0
1357
kasthuri

தமிழ் சினிமாவின் 90 காலகட்டங்களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் நடிகை கஸ்தூரி. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக திகழ்ந்த பிரபு, சத்யராஜ், கார்த்தி, சரத்குமார் என்று பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். அவ்வளவு ஏன் கமலுக்கு கூட இந்தியன் படத்தில் மகளாகவும் தங்கையாகவும் நடித்திருந்தார். தற்போது சர்ச்சைக்குரிய நடிகையாக திகழ்ந்து வருகிறார். அதற்கு முக்கிய காரணமே அம்மணி இந்த வயதில் தமிழ் படத்தில் போட்ட குத்தாட்டமும், அடிக்கடி சமூக வைத்தளத்தில் பதிவிட்டு வரும் சர்ச்சையான பதிவுகளும் தான்.

சினிமா பிரபலங்கள். அரசியல் பிரபலங்கள் என்று யாரையும் பார்க்காமல் தவறு என்றால் ட்விட்டரில் தட்டிக் கேட்டவர் நடிகை கஸ்தூரி. அதே போல ட்விட்டரில் தன்னை விமர்சிப்பவர்களை உடனடியாக பதிலடியை கொடுத்துவிடுவார். இப்படி ஒரு நிலையில் தான் இவர் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்டு கார்ட் போட்டியாளராக கலந்து கொண்டார். ஆனால், ட்விட்டரில் அவர் பேசிய பேச்சுக்கும் பிக்பாஸில் இவர் இருந்ததற்கும் எந்த வித சம்பந்தமும் இல்லாத போலத்தான் தோன்றியது. டுவிட்டரில் படு மாஸாக பேசிக்கொண்டிருந்த கஸ்தூரி பிக் பாஸ் வீட்டில் புஸ்ஸென்று ஆகிவிட்டார். அதிலும் இருவருக்கும் வனிதாவுக்கும் ஏற்பட்ட பிரச்சினையில் இவரால் அனிதாவிற்கு ஈடுகொடுக்க முடியவில்லை.

- Advertisement -

அதேபோல இவருக்கு பிக்பாஸில் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கவில்லை. இதனால் ஒரு சில தினங்களிலேயே இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து மக்களால் வெளியேற்றப்பட்டார். இருப்பினும் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அடிக்கடி பதிவுகளை செய்து வருகிறார். அதேபோல ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு உடனுக்குடன் பதில் அளித்தும் விடுகிறார். அந்த வகையில் சமீபத்தில் ட்விட்டர்வாசி ஒருவர் ஏன் அனைத்து பிரபலங்களும் தன்னுடைய கணவர்களை வெளிப்படையாகக் காட்டுவது இல்லை இதற்கு ஏதாவது காரணம் இருக்கிறதா ? என்று கேள்வியை கேட்டிருந்தார்.

இதற்கு பதில் அளித்த நடிகை கஸ்தூரி குழந்தையைக் கூட விட்டு வைக்காமல் சில வக்கிர புத்தி கொண்டவர்கள் இருக்கிறார்கள். எனவே ஏன் நாங்கள் குடும்ப விவரங்களை வெளிப்படுத்த வேண்டும். என்னுடைய கணவர் பெயரைக் கேட்டு எங்களுக்கு குடும்ப அட்டை வாங்கித் தர போகிறீர்களா. என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை என்னுடையது. அது ஒன்றும் கண்காட்சி கிடையாது. என்னுடைய நண்பர்களுக்கும் குடும்பத்தாருக்கும் என்னை பற்றி தெரியும் மற்றவர்களுக்கு ஏன் தெரிய வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

-விளம்பரம்-
Advertisement