மன்னிப்பு கேட்டுள்ள கவின்.. அசிங்கபடுத்தும் மதுமிதா.. ட்விட்டர் பதிவை கண்டு கடுப்பான கவின் ரசிகர்கள்..

0
44458
madhu-kavin
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நிறைவடைந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் முகென் பிக்பாஸ் பட்டத்தை தட்டிச் சென்றார். கடந்த இரண்டு சீசன்களை விட இந்த சீசனில் தான் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன அதில் குறிப்பாக சரவணன் மற்றும் மதுமிதாவின் வெளியேற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அதிலும் மதுமிதா கையை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்று பின்னர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் மதுமிதாவின் வெளியேற்றத்திற்கு காரணத்தை விஜய் தொலைக்காட்சி தெரிவிக்க வேண்டும் என்று கோரிக்கையும் வலுத்துக்கொண்டு தான் வருகிறது.

மதுமிதா பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது காவிரி குறித்து பேசியதாகவும் இதனால் கர்நாடகத்தை சேர்ந்த ஷெரீனுக்கும் அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் அது மிகப் பெரிய சண்டையாக மாறியதாகவும் அப்போது கூறப்பட்டது. மேலும், ஷெரீனுக்கு ஆதரவாக மற்ற போட்டியாளர்களை சேர்ந்து மதுமிதாவை மிகவும் பேசி துன்புறுத்தியதால் ஒரு கட்டத்தில் ஆத்திரம் தாங்காமல் மதுமிதா கத்தியால் தனது கைகளை அறுத்துக் கொண்டார். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் விதிகளை மீறியதாக பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னர் போட்டிகளில் பங்கேற்ற மதுமிதா சேரன் மற்றும் கஸ்தூரியை தவிர மற்ற அனைவரும் தன்னை காயப்படுத்துவதாக கூறி இருந்தார். மதுமிதா விஷயத்தில் சாண்டி மற்றும் அவருக்கு ஆதரவாக இருந்த கவினையும் தற்போது மதுமிதாவின் கணவர் டுவிட்டரில் படு மோசமாக விமர்சித்து உள்ளார்.

இதையும் பாருங்க : வீரம், ஜில்லா பஞ்சாயத்தில் சிக்கிய சங்கத்தமிழன்.. தீபாவளி ரிலீஸில் சிக்கல்..

- Advertisement -

பிக் பாஸ் நிறைவடைந்து பல நாட்கள் ஆன நிலையில் மதுமிதா குறித்து எந்த ஒரு போட்டியாளரும் பேசவில்லை என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில் கக்கூஸ் கேங்க் அதாவது சாண்டி மற்றும் கவின் , மதுமிதாவிடம் மன்னிப்பு கேட்டதாகவும் மதுமிதாவின் கணவர் மோசஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் மறைமுகமாக பதிவிட்டுள்ளார். இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர் கக்கூஸ் கேங் மனம் திருந்தி வருந்தி கேட்டுக்கொண்டதால் பரவிக்கிடக்கும் அவர்களின் மணத்தை பற்றி தயவுசெய்து யாரும் பேச வேண்டாம். மீண்டும் மணம் வீசினால் பார்ப்போம் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு மூலம் சாண்டி மற்றும் கவின் மதுமிதாவிடம் மன்னிப்பு கேட்டுள்ளார் களா என்று ரசிகர்கள் மனதில் கேள்விகள் எழுந்துள்ளது. இருப்பினும் கவின் குறித்து மதுமிதாவின் கணவர் இப்படி பதிவேடு உள்ளது கவின் ரசிகர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுமிதாவின் வெளியேற்றத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றுமதுமிதாவுக்கு ஆதரவாக பல்வேறு பதிவுகளை சமூகவலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். மேலும், மதுமிதா விஷயத்தில் எதிராக இருந்த போட்டியாளர்களை ட்ரோல் செய்து வீடியோக்களையும் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் கவினை கிண்டல் செய்து அவரது ஹேட்டர்ஸ்கள் வீடியோ ஒன்றை பகிர்ந்து உள்ளனர். அந்த வீடியோவை லைக் செய்துள்ள மதுமிதாவின் கணவர் மோசஸ் வேற லெவல் என்றும் கமெண்ட் செய்துள்ளார். இதனால் கவின் ரசிகர்கள் மிகுந்த கோபத்தில் ஆழ்ந்துள்ளனர். பிக்பாஸ் வீட்டில் மதுமிதாவை துன்புறுத்தினார்கள் என்று கூறும் நீங்கள் இப்போது ஒருவரை அசிங்கப்படுத்தும் வீடியோவை எதற்காக ஆதரிக்கிறீர்கள் இது மட்டும் இப்போது ஞாயமா என்றும் கவின் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். மேலும், மதுமிதா கணவர் பதிவிடுவது எல்லாம் மதுமிதாவிற்கு தெரியாமலா இருக்கும் என்றும் கமன்ட் செய்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement