தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சகோதரியின் பிறந்தநாளுக்கு லாஸ்லியா போட்ட உருக்கமான பதிவு.

0
87027
losliya
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வெற்றிகரமாக நிகழ்ச்சியாக திகழ்ந்து வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் கடந்த சிலமாதங்களுக்கு முன்னர் நிறைவடைந்தது. இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிச்சயமில்லாத ஒரு சில போட்டியாளர்கள் கலந்துகொண்டார்கள். அந்த வகையில் லாஸ்லியா மிகவும் முக்கியமான நபர் ஆவார். இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்த லாஸ்லியா, தனது நண்பர் ஒருவர் மூலமாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் நுழைந்தார்.

-விளம்பரம்-
Related image

லாஸ்லியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் நுழைந்த ஒரே நாளில் இவருக்கு சமூக வலைதளத்தில் பல்வேறு ஆரமிக்கல் கூட உருவானது இதற்கு முக்கிய காரணமே இவரது க்யூட்டான தோற்றம் என்றே கூறலாம். ஆரம்பத்தில் பிக்பாஸ் வீட்டில் பட்டாம்பூச்சி போல சுற்றித்திரிந்த லாஸ்லியா பின்னர் கவின் மீது காதல் வயப்பட்டார். சொல்லப்போனால் இந்த பிக்பாஸ் சீசன் முழுக்க கவின் மற்றும் லாஸ்லியாவின் காதல் கதைதான் ஓடிக்கொண்டு இருந்தது.

இதையும் பாருங்க : இன்ட்ரோ வைக்க கூட மனசில்லயா. ஏன் இதுல நடிச்சனு திட்னாங்க. பிகில் படத்தால் ஆனந்த் ராஜ் வேதனை. வீடியோ.

- Advertisement -

இவர்கள் இருவருக்கும் சமூகவலைதளத்தில் எக்கச்சக்க ஆர்மி கூட உருவானது. இதனால்தான் லாஸ்லியா இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றதற்கு ஒரு முக்கிய காரணமாகாவும் பார்க்கப்படுகிறது. அது போல லாஸ்லியாவின் மறக்கமுடியாத எபிசொட் என்றல் அது ஜூன் 29ஆம் தேதி ஒளிபரப்பான எபிசோட் என்று கூறலாம். இந்த எபிசோடின் போது போட்டியாளர்கள் அனைவரும் தங்கள் வாழ்வில் நேர்ந்த சந்தோஷமான தருணங்களையும் சோகமான தருணங்களையும் பகிர்ந்து கொண்டார்கள். இந்த எபிசோடில் பேசிய லாஸ்லியா மறைந்த தனது சகோதரி குறித்து மிகவும் உருக்கமாக கண்ணீர் விட்டு தெரிவித்திருந்தது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

இந்த நிலையில் நேற்று ஜனவரி 27 லாஸ்லியாவின் மறைந்த சகோதரியின் பிறந்தநாளை முன்னிட்டு தனது சகோதரியுடன் இருக்கும் சிறுவயது புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள லாஸ்லியா, இன்று இந்த க்யூடியின் பிறந்தநாள். ஆனால், இப்போது அவள் இல்லை. எனக்கு வாழ்க்கை குறித்து பல்வேறு விஷயங்களை கற்றுக் கொடுத்தவள். நம்மை விட்டு பிரிவதற்கு முன்பாக உறவுகளுக்கு மரியாதையையும் முக்கியத்துவத்தையும் கொடுங்கள். அவர்கள் சென்ற பின்பு அதை பற்றி வருந்தாதீர்கள் என்று உருக்கமான பதிவு செய்துள்ளார் லாஸ்லியா.

-விளம்பரம்-
Advertisement