விஜய், அஜித்துக்கு நிகராக மாஸ் காட்டும் கவின்.. இம்முறை என்ன டேக் தெரியுமா ?

0
4596
kavin

பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான போட்டியாளர்கள் கலந்துகொண்டார்கள். அந்த வகையில் இந்த சீசனில் கலந்து கொண்ட ஆண் போட்டியாளர்கள் மிகவும் அதிகமான ரசிகர்களை கொண்டவராக இருந்து வந்தார் நடிகர் கவின். பிக் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பாக விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரில் வேட்டையன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்திருந்தார் நடிகர் கவின். அந்த சீரியலில் கிடைத்த பிரபலம் மூலம் இவர் சினிமாவில் ஹீரோவாகவும் நடித்து இருந்தார்.

Image

பிக் பாஸ் நிகழ்ச்சியை பொறுத்த வரை கடந்த இரண்டு சீசன்களை விட மூன்றாவது சீசனில் தான் நெட்டிசன்கள் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினார்கள் என்றால் அது மிகையில்லை,இதனை உணர்ந்த இந்த பிக் பாஸ் சீசன் 3  போட்டியாளர்கள் வரும் போதே தங்களுக்கென ஆர்மி என்று சொல்லக்கூடிய ரசிகர்கள் குழுவை சமூக வலைத்தளங்களில் உருவாக்கிவிட்டு தான் வருகிறார்கள். அதிலும் கவினுக்கு சமூக வலைதளத்தில் இருந்த ஆதரவை பற்றி நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. அந்த அளவிற்கு கவினுக்கு சமூக வலைதளத்தில் பல ஆர்மிக்கள் இருந்து வருகிறது.

- Advertisement -

பிக் பாஸ் வீட்டில் இருந்த வரை கவின் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி இருந்தார். அதே போல பிக் பாஸ் வீட்டில் இருந்த பெரும்பாலான போட்டியாளர்களால் அதிகம் வெறுக்கப்ட்டார் கவின். இதனால் பிக் பாஸ் வீட்டில் இருந்த போது கவின் பலமுறை நாமினேஷனில் இடம் பெற்றுள்ளார். சொல்லப்போனால் பிக் பாஸ் வரலாற்றிலேயே அதிகம் முறை நாமினேஷனில் இருந்தவர் கவின் மட்டும் தான் என்று சொல்லும் அளவிற்கு கவின் பல முறை நாமினேஷனில் இடம்பெற்றனர் . ஆனால், இவர் நாமினேஷனில் இடம் பெற்ற ஒவ்வொரு முறையும் இவர் தான் போட்டியில் முதல் இடத்தில் இருந்து வந்தார்.

அதிலும் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கவின் தாயார் கைது செய்யப்பட்டபோது கவின் ஆர்மி #Westandforkavin என்ற ஹேஷ் டேகை சமூக வலைதளத்தில் உருவாக்கினர். அந்த வகையில் #வெற்றிமகன்கவின் என்ற ஹேஷ் டேகை உருவாக்கினர். அதே போல #Weadmirekavin #Kavinnotaeasytarget போன்ற பல்வேறு ஹேஷ் டேக்குகளை அடிக்கடி கவின் ரசிகர்கள் உருவாக்கி வந்தார்கள். அதிலும் இதில் ஒரு சில ஹேஷ் டேக்குகள் இந்திய அளவில் ட்ரெண்டிங்கிலும் வந்தது. இந்த நிலையில் கவின் ரசிகர்கள் தற்போது #kavintimetoshine என்ற ஹேஷ் டேக்கை உருவாக்கியுள்ளனர்.

-விளம்பரம்-
Image

இந்த ஹேஷ் டேக்கும் தற்போது ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. கடந்த சில வாரங்களாக விஜய் மற்றும் அஜித்தின் ஹேஷ் டேக்குகள் ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் வந்தது. விஜய்யின் பிகில் படத்தின் ட்ரைலர் வெளியான போது விஜய் ட்ரெண்டிங்கில் வந்தார். அதே போல அஜித்தின் வலிமை படத்தின் பூஜை அறிவிக்கப்பட்ட போது #valimai என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் அதிகம் ட்வீட் செய்யப்பட்ட ஹேஷ்டேக் என்ற சாதனையை செய்தது. ஆனால், அஜித் மற்றும் விஜய்க்கு போட்டியாக தற்போது கவினும் ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் இருந்து வருவது தான் மிகவும் வியக்கத்தக்க விஷயமாக பார்க்கப்படுகிறது.

Advertisement