என் முகத்தில் இருந்த பருவுக்கு இதான் காரணம், அதான் உடலையும் குறைத்தேன். லாஸ்லியாக்கு இப்படி ஒரு பிரச்சனையா.

0
2740
losliya
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் பிரபலமடைந்து வரும் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்கள் மத்தியில் பிரபலமானவர் லாஸ்லியா. இவர் இலங்கை நாட்டின் செய்தி தொகுப்பாளராக பணியாற்றியவர். பின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் இவர் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் மத்தியில் பிரபலமாகி விட்டார். அதுமட்டுமில்லாமல் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போதே இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் சேர்ந்துள்ளது.

-விளம்பரம்-

பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து இவர் சில படங்களில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. தற்போது இவர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் பிரண்ட்ஷிப். இயக்குனர் ஜே.பி.ஆர் & ஷாம் சூர்யா இந்த படத்தை இயக்கி உள்ளனர். இந்த படத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், சதீஷ், அர்ஜுன் உள்பட பல நடிகர்கள் நடித்துள்ளார்கள். இந்த படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

இதையும் பாருங்க : நிதின் கட்கரியை விட ஒரு மாதத்தில் யூடுயூபில் அதிகம் சம்பாதிக்கும் மணிமேகலை – பிரியங்கா. எத்தனை லட்சம்னு பாருங்க.

- Advertisement -

இந்நிலையில் நடிகை லாஸ்லியா அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர் தன்னைப் பற்றி சில சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அதில் அவர் கூறியிருப்பது. எனக்கு முன்னாடி எல்லாம் நிறைய பிம்பிள் இருக்கும். அதுக்காக நான் நிறைய ட்ரீட்மென்ட் எல்லாம் பண்ணேன். அது மட்டுமில்லாமல் எனக்கு பிசிஓடி(PCOD) ப்ராப்ளம் இருக்கிறது. அதனால் நான் வெயிட் கொஞ்சம் போட்டேன்.

டாக்டரும் பிசிஓடி பிராப்ளம் இருந்தால் உடம்பு வெய்ட் கொஞ்சம் போடும் அதனால் வெயிட்லாஸ் பண்ணுங்கன்னு சொன்னாங்க. பிறகு நான் ஜிம்முக்கு போக ஆரம்பிச்சேன். ஜிம்முக்கு போய் தான் நான் என் உடம்பை குறைத்தேன். அப்புறம் ஸ்கின் டாக்டர் கிட்ட நான் என்னுடைய முகம் குறித்து டீரீட்மெண்ட் பண்ணேன். இப்ப எனக்கு அந்த பிரச்சனை எல்லாம் இல்லை. நான் நல்லா இருக்கிறேன் என்று பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

-விளம்பரம்-
Advertisement