அந்த 8 பேர் தான் காரணம்.! இதை தான் நான் பேசினேன்.! மதுமிதா அளித்த முதல் பரபரப்பு பேட்டி.!

0
13254
madhu
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கடந்த சில வாரத்திற்கு முன்னர் மதுமிதா தற்கொலைக்கு முயன்றதாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து அதிகாரபூர்வமாக வெளியேற்றப்பட்டிருந்தார். இந்த நிலையில் மதுமிதா மீது விஜய் தொலைக்காட்சி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியானது.

-விளம்பரம்-

பிக் பாஸ் வீட்டில் இருக்கும் அனைவருக்கும் சம்பளம் பேசப்பட்டு தான் பங்கேற்றுள்ளனர் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால், சம்பள பணத்தை தரவில்லை என்றால் மதுமிதா தற்கொலை செய்துகொள்வதாக மிரட்டுவதாக விஜய் தொலைக்காட்சியின் சட்டப்பிரிவு மேலாளர் பிரசாத், கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாக செய்திகள் பரவி வந்தன.

- Advertisement -

ஆனால், இந்த தகவலை மறுத்து வந்தார் மதுமிதா. அதே போல மதுமிதா பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னர் எந்த ஒரு பேட்டியிலும் பங்கேற்காமல் இருந்தார். இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் முதன் முறையாக பேட்டி அளித்துள்ளார் மதுமிதா. அந்த பேட்டியில் பல்வேறு உண்மையைகளை போட்டுடைத்துள்ளார்.

madhumitha

அந்த பேட்டியில் பேசிய அவர், சுதந்திர தினத்தன்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் காவிரி நீர் குறித்து நான் பேசியதை மற்ற போட்டியாளர்கள் அரசியல் ஆக்கிவிட்டார்கள் என்று நடிகை மதுமிதா தெரிவித்துள்ளார்.மேலும், உடன் இருந்த மற்ற 8 போட்டியாளர்கள் குழுவாக தனக்கு தொந்தரவு கொடுத்ததாகவும் நடிகை மதுமிதா குற்றம் சாட்டியுள்ளார்.நான் தற்கொலை முயற்சி எடுத்தபோது என்னை கஸ்தூரியும், சேரனும் தான் காப்பாற்ற முயன்றார்கள் என்றும், மற்றவர்கள் ஒரு குற்ற உணர்வும் இல்லாமல் இருந்தது வேதனை அளிக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.

-விளம்பரம்-

நான் காவிரி பற்றி பேசிய போது அதனை அனைவரும் கலாய்த்தனர். பின்னர் அரை மணி நேரத்தில் பிக் பாஸிடம் இருந்து ஒரு கடிதம் வந்தது. அதில் நீங்கள் பேசிய விஷயம் ஒளிபரப்ரபடாது என்று குறிபிடிபட்டது. அதை கண்டதும் அந்த 8 பெரும் மேலும் கிண்டல் செய்தனர். இதனால் நான் என் கையை அறுத்துக்கொண்டேன். அப்போதும் அந்த 8 பேரில் சிலர் இது டிராமா போடுது என்று கிண்டல் செய்தனர்.

மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் மறைக்கப்பட்ட விஷயங்களுக்காக கமல்ஹாசன் குரல் கொடுக்க வேண்டும் என்றும், 40 நிமிட எபிசோடை மட்டும் பார்த்து கமல் பேசாமல் வீட்டில் 24-மணி நேரம் என்ன நடக்கிறது என்பதை கமல் கண்காணிக்க வேண்டும் என்றும்  நடிகை மதுமிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும், எனக்கு வர வேண்டிய சம்பளம் விஜய் டிவி கொடுத்துவிட்டது. ஆனால், என்னை எந்த பேட்டியையும் கொடுக்காமல் என்னை தடுத்தார்கள். மேலும், இதை பற்றி எப்போதும் என்னை பேச கூடாது என்றும் கூறினார்கள். ஆனால், எத்தனை நாள் தான் பேட்டி கொடுக்காமல் இருப்பது. இதுகுறித்து விஜய் டிவியிடம் தொடர்பு கொண்ட போது அவர்கள் எனக்கு பதிலளிக்கவில்லை.


Advertisement