படத்துல மட்டுமல்ல நிஜத்திலும் அக்கா தங்கைகள் தான் – அதுவும் இவங்க இந்த பிக் பாஸ் 6 பிரபலத்தின் மனைவியாம்.

0
1104
Sofia
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் எப்போதும் வித்தியாசமான கதைக்களத்தை கொடுப்பதில் மிஷ்கின் கைதேர்ந்தவர். அதுவும் இவருடைய படங்கள் எல்லாம் திர்ல்லர், ஆக்ஷன் போன்ற பாணியில் தான் இருக்கும். சமீபத்தில் மிஷ்கின் இயக்கத்தில் உருவான சைக்கோ படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஆரம்பத்தில் மிஸ்க்கின், யூத், காதல் வைரஸ் போன்ற படங்களில் துணை இயக்குனராக பணியாற்றினார். அதன் பின்ன சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

-விளம்பரம்-

இந்த படத்தை தொடர்ந்து இவர் இயக்கிய அஞ்சாதே திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் பள்ளி மாணிவிகளை கடத்துவார் பிரசன்னா. படத்தில் மட்டுமல்ல நிஜத்திலும் இவர்கள் இருவரும் அக்கா தங்கைகள் தான். தற்போது இவர்கள் இருவருமே நடிகைகள் தான்.

- Advertisement -

இவர்கள் இருவர் தான் அட்டகத்தி படத்தில் நதியா, திவ்யா என்று இரண்டு பெண்கள் நடித்து இருப்பார்கள்.அந்த காட்சியில் திவ்யா என்ற கதாபாத்திரத்தில் வரும் நடிகை வெறு யாரும் இல்லை, இதே படத்தில் நடித்த நடிகை ஐஸ்வர்யாவின் அண்ணி தான். அதே போல நதியா என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் சோபியாவின் உடன் பிறந்த அக்கா தான் என்பது பலரும் அறிந்திராத ஒன்று.

ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன், சீரியல்களில் நடித்து வருகிறார். வள்ளி, கேளடி கண்மணி, அழகு சீரியல்களில் நடித்துள்ளார். இவரது மனைவி தான் அட்டகத்தி படத்தில் திவ்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்த நடிகை சோபியா. இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கிறார்.

-விளம்பரம்-

மேலும், இவர் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த ‘லட்சுமி’ படத்திலும் நடன ஆசிரியராக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதியாக இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் கூட பங்கேற்று இருந்தனர். ஆனால், உடல் நல பிரச்சனை காரணமாக பாதியிலேயே இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி இருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது மணிகண்டன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு இருக்கிறார். இவர் ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரர் என்பது இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்த பின்னரே தெரியும். அதுவும் இவர் பிக் பாஸில் கலந்துகொண்ட முதல் நாளில் ஐஸ்வர்யா ராஜேஷ் வீடியோ மூலம் இவருக்கு வாழ்த்துக்களை கூறி இருந்தார். ஆரம்பத்தில் சிறப்பாக ஆடிய இவர் தற்போது மைனாவுடன் சேர்ந்து Gropism பஞ்சாயத்தில் சிக்கி இருக்கிறார்.

Advertisement