இதே Continue பண்ணட்டுமா – விஷ்ணுவுடன் Love Contentஐ பிளான் பண்ணி செய்துள்ள பூர்ணிமா மற்றும் மாயா.

0
556
Vishnu
- Advertisement -

விஜய் டிவியில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 13 வாரங்களை கடந்து இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, சுரேஷ், ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள்.இதுவரை இதில் பவா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி, பிரதீப், ஐஷு, கானா பாலா, அக்ஷயா, பிராவோ, ஜோவிகா, அன்னயா, கூல் சுரேஷ், சரவணா விக்ரம், நிக்சன், ரவீனா ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர்.

-விளம்பரம்-

பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே நிச்சயம் ஒரு காதல் கண்டன்ட் இருக்கும். அந்த வகையில் இந்த சீசனில் நிக்சன் – ஐசு, மணி – ரவீனா, விஷ்ணு – பூர்ணிமா ஆகிய மூவரை வைத்து லவ் கண்டண்டை தேர்த பார்த்தது பிக் பாஸ் குழு. அனால், அது கண்டன்ட் ஆக இல்லாமல் கண்றாவியாக தான் மாறியது. இருப்பினும் விஷ்ணு – பூர்ணிமா இருவரின் கண்டன்ட் கொஞ்சம் போலியானது போல தான் இருந்தது.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் இன்றைய நிகழ்ச்சியில் பிக் பாஸ் டாஸ்க் ஒன்றை கொடுத்து இருந்தார். அதில் போட்டியாளர்கள் யாராவது ஒருவரை தேர்ந்தெடுத்து அவரின் கடந்து வந்த பாதையை பற்றி சொல்ல வேண்டும் என்று கூறி இருந்தார். இதில் பூர்ணிமா, விஷ்ணு கடந்து வந்த பாதை பற்றி கூறி இருந்தார். அதில் விஷ்ணு கடந்து வந்த பாதையை பற்றி கூறியதை விட அவர் தனக்கு பண்ணதை மட்டும் தான் மணி கணக்காக பேசினார் பூர்ணிமா.

அதிலும் விஷ்ணு தன்னை ஏமாற்றிவிட்டதாகவும் அவர் தன்னை ஒரு tissue பேப்பர் போல பயன்படுத்தி தூக்கி எரிந்துவிட்டதாகவும் கூறி இருந்தார். பூர்ணிமாவின் இந்த பேச்சுக்கு மாயாவும் கூட சேர்ந்து விஷ்ணுவை வெறுப்பேற்றினார். இப்படி ஒரு நிலையில் மாயா, பூர்ணிமா – விஷ்ணு விஷயத்தில் செய்த கேவலமான செயல்கள் குறித்த சுட்டிக்காட்டி நெட்டிசன்கள் பலர் மாயாவை கேலி செய்து வருகின்றனர்.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மாயா மற்றும் பூர்ணிமா இருவரும் விஷ்ணுவுடனான love contentஐ பிளான் செய்துள்ள வீடியோ ஒன்றும் வைரலாகி வருகிறது. அதில் மாயாவிடம் ‘நான் இதை Continue செய்யட்டுமா என்று கேட்க, அதற்கு மாயா, இருக்கறுதலயே கொஞ்சத்தில் கொஞ்சம் செய்தாலே ஒரு வாரத்தை ஒட்டிவிடலாம் என்றும் கூறியுள்ளார். இப்படி விஷ்ணுவை இவர்கள் இருவரும் சேர்ந்து பயன்படுத்திவிட்டு தற்போது விஷ்ணுவை பலியிட பார்த்து வருகின்றனர்.

இந்த சீசன் ஆரம்பத்தில் இருந்தே மாயா தான் பூர்ணிமாவை மிக அதிமாக பயன்படுத்தி வருகிறார். ஆரமபத்தில் மாயா தான் பூர்ணிமா – விஷ்ணு இருவரையும் இணைத்து அடிக்கடி பேசி அவர்களுக்குள் ஒரு நெருக்கத்தை கொண்டு வந்தார். அனால், ஒரு கட்டத்தில் பூர்ணிமா, விஷ்ணு பக்கம் அதிகம் சாய்ந்ததால் அதனை பொறுத்துக்கொள்ள முடியாத மாயா, விஷ்ணுவை பற்றி அடிக்கடி பற்றவைத்து பூர்ணிமாவை விஷ்ணுவிடம் இருந்து பிரித்துவிட்டார்.

மேலும், பூர்ணிமா சொல்வது போல விஷ்ணு, பூர்ணிமாவை பயன்படுத்தியதை விட மாயா தான் மற்றவர்களை அதிகம் பயன்படுத்திக்கொண்டார். மேலும், விஷ்ணு ஆரம்பத்தில் மாயா – பூர்ணிமா பக்கம் தான் இருந்தார். ஆனால், நாட்கள் செல்ல செல்ல பூர்ணிமாவை வைத்து மாயா போட்ட சூழ்ச்சியான திட்டத்தை புரிந்துகொண்டு தான் அவர்களிடம் இருந்து விலகிவிட்டதாகவும் விஷ்ணு கூறியுள்ளார்.

Advertisement