குடியுரிமை சட்ட திருத்தும் குறித்து மீரா மிதுன் வெளியிட்ட வீடியோ. கழுவி ஊற்றும் ரசிகர்கள்.

0
2013
meera-mithun

பிக் பாஸ் மீரா மிதுனை பற்றி தெரியாதவர்கள் யாராவது இருப்பார்களா?? அந்த அளவிற்கு சமூக வலைதளங்களின் சர்ச்சை நாயகியாக உள்ளவர். நடிகை மீரா மிதுன் அவர்கள் தென்னிந்திய திரைப்பட நடிகை மட்டும் இல்லாமல் 2016 ஆம் ஆண்டு நடந்த மிஸ் 2016 இந்தியா போட்டியின் வெற்றியாளர் ஆவார். ஆனால், அந்த வெற்றியை மீண்டும் அவரிடம் இருந்து பரித்து விட்டார்கள் என பல சர்ச்சைகள் எழுந்தது. இது அனைவருக்கும் தெரிந்தே. மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்தவுடன் மீரா மிதுன் விட்டு பல சர்ச்சைகள் சமூக வலைத்தளங்களில் எழுந்த வண்ணம் உள்ளன. பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் இவர் தமிழ் மக்களிடம் பிரபலமானவர் என்று சொல்லலாம்.

நடிகை மீரா மிதுன் அவர்கள் மாடலிங் மற்றும் படங்கள் என பல வேலைகள் செய்து இருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சி தான் இவரை மக்களுக்கு அடையாளம் காண்பித்தது. மேலும், சென்னையில் இவர் வாழ்வதற்கு பல பிரச்சனைகள் உள்ளது என்ற காரணத்தினால் இவர் தற்போது மும்பையில் குடி பெயர்ந்து உள்ளார். அதுமட்டுமில்லாமல் தமிழகம் எனக்கு பாதுகாப்பு தரவில்லை. இதனால் கடுமையாக தமிழக அரசை கண்டிக்க வேண்டும் என்றும் சர்ச்சையை கிளப்பினார். இது அனைவருக்கும் தெரிந்த நிலையில் இந்தியாவில் கடந்த சில வாரங்களாகவே குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இதையும் பாருங்க : பேனில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள லக்ஷ்மன் ஸ்ருதி உரிமையாளர்.

- Advertisement -

குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து போராடிய மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினார்கள். இதனால் நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் கொந்தளித்து போராட்டத்தை தொடங்கினர். குடியுரிமை சட்ட திருத்தம் கண்டித்து பல பிரபலங்கள், அரசியல்வாதிகள் என அனைவரும் போராட்டத்தை தீவிரம் ஆக்கினர். எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்புக்குப் பிறகும் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் இரு அவைகளும் நிறைவேற்றியது. இதை தொடர்ந்து நாடு முழுவதும் பல இடங்களில் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக போராட்டம் நடை பெற்று வருகின்றது. இந்நிலையில் நடிகை மீரா மிதுன் அவர்கள் இந்த சட்டம் நல்லது தான்.

-விளம்பரம்-

இது அரசியல் காரணத்துக்காக வருகிறது என்றும் அவர் வீடியோ ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டு உள்ளார். மேலும், கோடிக்கணக்கான மக்கள் குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டி வருகின்ற னர். இதில் பல பேர் கைதாகியும், அடி வாங்கியும் பல துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். இந்திய மக்களே இதை எதிர்க்கும் போது மீரா மிதுன் மட்டும் சரி என்று ஒரு வீடியோ வெளியிட்டு இருப்பதைப் பார்த்து அனைவரும் பயங்கள் கொந்தளிப்பில் உள்ளார்கள். மேலும் மீரா மிதுன் குறித்து சமூக வலைதளங்களில் பல விமர்சனங்களையும் எழுப்பி வருகிறார்கள். அதுமட்டும் இல்லாமல் நடிகை மீரா மிதுன் இது மாதிரி சர்ச்சைகளில் சிக்கியது புது விஷயம் கிடையாது. இவரை பற்றி விமர்சனம் வருதும் வழக்கமான ஒன்று தான்.

Advertisement