யார் என்ன பண்ணாலும் தமிழ் தமிழ்தான் – மொழி திணிப்பு பற்றி பிக்பாஸ் முத்துக்குமரன் அளித்த பேட்டி 

0
155
- Advertisement -

மொழி திணிப்பு குறித்து பிக் பாஸ் முத்துக்குமரன் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி தொடங்கி 105 நாட்கள் நடந்து வெற்றிகரமாக சமீபத்தில் தான் முடிந்தது. இந்த சீசனில் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா, தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்று இருந்தார்கள்.

-விளம்பரம்-

இந்த முறை நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கி இருந்தார். இந்த முறை ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்பதால் பல்வேறு டீவ்ஸ்டுகளுடன் பிக் புதுசு நிகழ்ச்சி ஆரம்பமாகி இருந்தது. அதன் பின் நிகழ்ச்சியை சுவாரசியம் ஆக்கும் வகையில் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக 6 பேர் கலந்து இருந்தார்கள். மேலும், அனைவரும் எதிர்பார்த்தபடி பிக் பாஸ் நிகழ்ச்சியின் grand finale சுற்று நடந்து இருந்தது. முத்துக்குமரன் தான் டைட்டில் பட்டதை வென்று கோப்பையை வாங்கி இருந்தார்.

- Advertisement -

பிக் பாஸ் முத்துக்குமரன்:

இவரை அடுத்து இரண்டாம் இடத்தை சௌந்தர்யா, மூன்றாம் இடத்தை விஷால், நான்காம் இடத்தை பவித்ரா, ஐந்தாம் இடத்தை ராயன் வென்று இருக்கிறார்கள். வெற்றி பெற்றவர்களுக்கு ரசிகர்கள், பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நன்றி தெரிவித்து முத்துக்குமரன் வீடியோ போட்டு இருந்தார். பிக் பாஸ் பிறகு முத்துக்குமரன் பல நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறார். அதோடு இவருக்கு பட வாய்ப்புகள் வருவதாகவும் கூறப்படுகிறது.

முத்துக்குமரன் பேட்டி:

இப்படி இருக்கும் நிலையில் மொழி திணிப்பு குறித்து முத்துக்குமரன் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி விடுகிறது. அதாவது, சேலம் நான்கு ரோடு அருகே தனியார் கிளினிக் திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக பிக் பாஸ் முத்துக்குமரன் கலந்து கொண்டிருந்தார். அதற்குப்பின் செய்தியாளர்களை சந்தித்த பிக்பாஸ் முத்துக்குமரன், எனக்கு சினிமா அறிவு கிடையாது. கற்றுக் கொண்டு வருகிறேன். மொழி திணிப்பு என்பது இன்று நடைபெறுவது கிடையாது.

-விளம்பரம்-

தமிழ்மொழி பற்றி சொன்னது:

நூற்றாண்டு காலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மொழிக்காக நாம் செய்த தியாகங்களும் போராட்டங்களும் அடுத்த 100 ஆண்டுகளுக்கும் செய்து கொண்டுதான் இருக்க வேண்டும். யார் என்ன செய்தாலுமே தமிழ் தமிழ் தான். தற்போது இருக்கும் தலைமுறைக்கு மொழி மீது ஆர்வம் இருக்கிறது. தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் நான் சென்று வருகிறேன். தமிழ் மீது மாணவர்கள் கொண்டிருக்கும் அன்பையும் பிரியத்தையும் தன்னம்பிக்கையும் பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கிறது.

மொழி திணிப்பு பற்றி சொன்னது:

தமிழ்மொழி மீது அதிக ஆர்வம் கொண்டு இருக்கிறார்கள். இந்தி மொழியை யாராலும் திணிக்க முடியாது. அனைவரும் அனைத்து மொழியை கற்றுக் கொள்ளலாம். ஆனால், யாராலும் மொழியை திணிக்க முடியாது. பாடல், விளையாட்டு, நடனம் கற்றுக் கொள்வது போல மொழியையும் ஆர்வத்துடன் கற்றுக் கொள்ள வேண்டும். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு எனக்கு பட வாய்ப்புகள் வருகிறது. பலர் வாய்ப்பு தந்திருக்கிறார்கள். பல துறைகளில் கற்றுக் கொள்ள முயற்சித்து இருக்கிறேன் என்று கூறி இருக்கிறார்.

Advertisement