சிறை வாசலில் காத்திருந்து, அர்னவை பேட்டி எடுத்த பிக் பாஸ் முத்துக்குமரன் – வைரலாகும் வீடியோ இதோ

0
123
- Advertisement -

பிக் பாஸ் 8 நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற போட்டியாளர் முத்துக்குமரன் மற்றும் அதே நிகழ்ச்சியில் இரண்டாவது வாரமே வெளியேற்றப்பட்ட அர்னவ் ஆகிய இருவருக்கும் இருந்த பின்னணி தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. சமீபத்தில் தான் விஜய் டிவியில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி வெற்றிகரமாக முடிவடைந்தது. இந்த நிகழ்ச்சியில் முதலில் முத்துக்குமரன் மற்றும் அர்னவ் உட்பட ‌ மொத்தம் 18 போட்டியாளர்கள் பங்கேற்று இருந்தார்கள். இந்த முறை நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கியிருந்தார்.

-விளம்பரம்-

பின், இந்த நிகழ்ச்சியில் வைல்டு கார்டு என்ட்ரி ஆக மொத்தம் ஆறு பேர் கலந்து கொண்டிருந்தார்கள். இந்த முறை ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்பதால் ஆளும் ட்விஸ்ட்களுடன் பிக் பாஸ் நிகழ்ச்சி நடைப்பெற்றது. சுமார் 105 நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர் முத்துக்குமரன் தான் மக்களிடம் அதிக ஆதரவையும் வாக்குகளையும் பெற்று டைட்டிலை தட்டி தூக்கினார். இந்நிலையில், முத்துக்குமரன் மற்றும் அர்னவ் இடையே நடந்த ஒரு சுவாரசியமான கதை வைரலாகி வருகிறது.

- Advertisement -

பேட்டி எடுக்க காத்திருந்த முத்து:

அதாவது சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்பு புழல் மத்தியச் சிறையின் வாசலில் ஒரு பிரபலத்திடம் பேட்டி எடுக்க காத்திருந்தபோது, அந்த இளைஞர் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டான், விரைவில் அதே பிரபலத்துடன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கப் போகிறோம் என்றும், தாம் பேட்டி எடுக்க காத்திருக்கும் அந்த பிரபலத்தை பின்னுக்குத் தள்ளி ஜெயிப்போம் என்பதையும். ஆம் அது வேறு யாருமில்லை, பேட்டி எடுக்க காத்திருந்தவர் முத்துக்குமரன், அந்தப் பிரபலம் அர்னவ்.

சிறையில் இருந்த அர்னவ்:

ஆமாம், சீரியல் நடிகர் அர்னவ் தனது மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கைது செய்யப்பட்டு சிறைக்குள் போனபோது, முத்துக்குமரன் முதலில் அவரது மனைவி திவ்யாவிடம் பேட்டி எடுத்துள்ளார். அந்தப் பேட்டியில் திவ்யா அர்னவ் மீது பல குற்றச்சாட்டுகளைக் கூறியிருந்தார். பின் அந்தப் பேட்டி வெளிவந்த சில நாட்களிலேயே அர்னவுக்கு ஜாமீனும் கிடைத்தது. அந்தச் சமயத்தில் தான் எல்லா மீடியாவிலும் இவர்கள் பிரச்சனை போய்க்கொண்டிருந்ததால், அர்னவைப் பேட்டி எடுக்க சில யூடியூப் சேனல்கள் சிறை வாசலுக்கு சென்றிருந்தன.

-விளம்பரம்-

அர்னவை பேட்டியெடுத்த முத்து:

அப்போது அங்கு போய் காத்திருந்த ஆங்கர்களில் ஒருவர் தான் முத்துக்குமரன். அந்த இடத்தில் வைத்து அர்னவிடம் பேசினாலும், அப்போதே அந்த பேட்டி நிகழவில்லை. ஆனால், அடுத்த நாள் அந்த பேட்டியை முத்துக்குமரன் எடுத்தார்‌‌. ஆனால், கண்டிப்பாக அந்த சமயத்தில் முத்துக்குமரன் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார், அர்னவுடன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இப்படி ஒரு சந்திப்பு ஏற்படும் என்று. ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சியில் அர்னவை தெரிந்தது போல் முத்து காட்டிக் கொள்ளவே இல்லை.

முத்துவின் விளையாட்டு:

மேலும், அர்னவின் பிரச்சனை குறித்து சக போட்டியாளர்களிடம் கூட முத்துக்குமரன் எதுவுமே பேசவில்லை என்பதுதான் சிறப்பு. அதனால் ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை முத்துக்குமரன் விளையாட்டில் உபயோகிக்கவில்லை என்று அவரை பலரும் பாராட்டி வருகிறார்கள். ஒரு சிலர், அதெல்லாம் முத்துக்குமாரனின் விளையாட்டு உத்தியாகக் கூட இருக்கலாம் என்கிறார்கள். எது எப்படியோ வெற்றி பெற்ற முத்துக்குமரனுக்கு வாழ்த்துக்கள்.

Advertisement