தர்ஷன் நடிக்கம் முதல் படத்திற்கு ரஜினி, விஜய் பட இசையமைப்பாளர். செம லக்கு தான்.

0
1044
tharshan
- Advertisement -

விஜய் டிவியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. மற்ற இரண்டு சீசன்களை விட இந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி வேற லெவல் பிரபலமானது. உலகநாயகன் கமலஹாசன் அவர்கள் தான் மூன்று வருடமாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். இந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் காதல், நட்பு, சண்டை என கலவரங்களுக்கு பஞ்சமில்லாமல் ரசிகர்களை கவர்ந்தது. மேலும், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பல பிரபலங்கள் தங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் முன்னேறிக்கொண்டு இருக்கிறார்கள். அந்த வகையில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் தர்ஷன்.

-விளம்பரம்-
tharshan

இவர் இலங்கையை சேர்ந்த மாடல் ஆவார். இவர் பல விளம்பரப் படங்களில் நடித்துள்ளார். இவர் 2018 ஆம் ஆண்டு வெளியான வேறென்ன வேண்டும் என்ற படத்திலும் நடித்துள்ளார். ஆனால், இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார். இந்நிலையில் நடிகர் தர்ஷன் அவர்கள் ஹீரோவாக நடிக்கிறார் என்ற தகவல் ஏற்கனவே வெளியானது. இதனால் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

- Advertisement -

ஹீரோவாக தர்சன் நடிக்கும் படம் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.
தர்சன் ஹீரோவாக நடிக்கும் படத்தை புதுமுக இயக்குநர் இயக்குகிறார். இந்த படத்துக்கு ராக் ஸ்டார் அனிருத் இசை அமைக்கிறார் என்பதாக தகவல் வெளியாகியது. மேலும், இந்த படத்தை ஐங்கரன் இன்டர்நேஷனல் சார்பாக கருணாமூர்த்தி தயாரிக்கிறார். கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு உள்ளதால் படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. ஊரடங்கு நீக்கப்பட்ட பிறகு செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் இந்த படத்தின் வேலைகள் நடைபெற இருக்கு என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

Big Boss' Tharshan and Anirudh Ravichander to join hands for new film

மேலும், தர்சனை போல் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு கவின் அவர்கள் லிப்ட் என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். அதனைத் தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சி புகழ் லாஸ்லியா பிரெண்ட்ஷிப் படத்திலும், ஆரி அர்ஜுனா ஹீரோவாக நடிக்கும் பெயரிடாத படத்தில் நடித்து வருகிறார். சாக்ஷி அகர்வால் ஆர்யாவுடன் டெடி, ஜீவி பிரகாஷ் உடன் ஆயிரம் ஜென்மங்கள் உள்ளிட்ட பல படங்களில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement