மீண்டும் WildCardஆக என்ட்ரி கொடுக்கும் அந்த 3 பேர் இவர்கள் தான் – பிரதீப்பிற்கு மறு வாய்ப்பு கொடுக்கப்பட்டதா?

0
102
Pradeep
- Advertisement -

பிக் பாஸ் வீட்டில் மீண்டும் நுழைய இருக்கும் போட்டியாளர்கள் குறித்த விவரம் தற்போது வெளியாகி இருக்கிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 7வது வாரத்தை கடந்து இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள்.

-விளம்பரம்-

இதில் அனன்யா, பவா, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி,பிரதீப், ஐஷு ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர். கடந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனில் கானா பாலா, பூர்ணிமா, விசித்ரா, ரவீனா, பிராவோ, சரவண விக்ரம், அக்ஷயா ஆகியோர் நாமினேட் ஆகி இருந்தார்கள். இதில் பிராவோ, சரவண விக்ரம், அக்ஷயா ஆகிய மூன்று பேரில் யாராவது வெளியேறுவர் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கானா பாலா வெளியேறினார்.

- Advertisement -

இன்று வெளியான முதல் ப்ரோமோவில் பிக் பாஸ் வீட்டில் மேலும் 3 wild card போட்டியாளர்கள் வர இருப்பதாக அறிவிக்கப்பட்டது. மேலும், போட்டியாளர்களுக்கு மூன்று டாஸ்க் கொடுக்கப்படும், அதில் வென்றால் பிக் பாஸ் வீட்டில் தொடரலாம், தோற்றால் wild card போட்டியாளருக்கு வழிவிட்டு பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற வேண்டும் என்று போட்டியாளர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறார் பிக் பாஸ்.

தற்போது 14 போட்டியாளர்கள் இருக்கும் நிலையில் மேலும் மூன்று Wild Card போட்டியாளர்கள் உள்ளே வர இருப்பதால் தற்போது மேலும் ஆட்டம் சூடுபிடித்து இருக்கிறது. இது ஒருபுறம் இருக்க தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் பிக் பாஸ் வீட்டில் இருந்து ஏற்கனவே வெளியேறிய போட்டியாளர்களில் மூவர் தான் Wildcard போட்டியாளராக வருவார்கள் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. டாஸ்கில் வென்றால் போட்டியாளர்கள் உள்ளே இருக்காமல் இல்லையேல் அவர்களுக்கு பதில் Wildcard போட்டியாளர் அவருக்கு பதிலாக பிக் பாஸ் வீட்டில் தொடருவார்கள் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் அந்த மூன்று போட்டியாளர்கள் பற்றிய விவரம் தற்போது வெளியாகி இருக்கிறது. அதாவது முதல் வாரத்தில் வெளியேறிய அனன்யா, விஜய் வர்மா, வினுஷா ஆகிய மூன்று பேர் மீண்டும் நுழைய இருக்கின்றனர். ஏற்கனவே விஐய் வர்மாவிற்கு yellow card கொடுக்கப்பட்டு இருந்தது. எனவே, ஒரு வேலை அவர் மீண்டும் பிக் பாஸில் தொடர்ந்தால் நிச்சயம் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது.

இந்த மூன்று பேரில் வினுஷாவின் என்ட்ரி தான் மிக முக்கியமான ஒன்றாக இருக்கும். அதற்கு காரணம் நிக்சன், வினுஷாவை பற்றி உருவக் கேலி செய்தது குறித்து வினுஷா வெளியில் வந்த பின்னர் கடுமையாக கண்டித்து இருந்தார். ஆனால், வினுஷாவிடம் மன்னிப்பு கேட்டுவிட்டதாக நிக்சன் பொய் கூறி வந்தார். எனவே, வினுஷா உள்ளே சென்றால் நிக்சனை கண்டிப்பாக இந்த விஷயம் குறித்து கேட்காமல் விடமாட்டார்.

Advertisement