நேரடி நாமினேஷன் பவர் – விஷ்ணு நாமினேட் செய்த அந்த 2 போட்டியாளர் யார் தெரியுமா? ஒன்னு ஓகே ஒன்ன வேஸ்ட் பண்ணிட்டாரே.

0
391
- Advertisement -

விஜய் டிவியில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 7வது வாரத்தை கடந்து இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள். இதில் அனன்யா, பவா, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி,பிரதீப், ஐஷு ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர்.

-விளம்பரம்-

கடந்த வாரம் நடைபெற்ற கேப்டன் டாஸ்கில் தினேஷ் வெற்றிபெற்றார். தினேஷ் வெற்றி பெற்ற இந்த வாரம் பிக் பாஸ் வீடு, பிக் பாஸ் மற்றும் ஸ்மால் பாஸ் என்று வேற்றுமை இல்லாமல் ஒரே வீடாக இருக்கும் என்று அறிவித்தார் பிக் பாஸ். கடந்த வாரம் முழுதும் ஸ்டார்களுக்காக டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு இருந்தது. இதில் ரவீனா, மணி, விசித்ரா, விஷ்ணு ஆகியோர் அதிகப்படியான ஸ்டார்களை பெற்று இருந்தனர்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் கடந்த வாரம் முழுதும் நடைபெற்ற டாஸ்கில் சுவாரசியம் குறைவாக இருந்த போட்டியாளர்கள் இருவரை பிக் பாஸ் தேர்ந்தெடுக்க சொன்னார். இதில் பெரும்பாலானோர் அர்ச்சனா மற்றும் விசித்ராவை தேர்ந்தெடுத்தனர். ஆனால், எங்களை விட பிராவோ, அக்ஷயா, விக்ரம் எல்லாம் நன்றாக செய்துவிட்டார்களா என்று வாக்குவாதம் செய்த விசித்ரா, தன்னால் சிறைக்கு செல்ல முடியாது என்று தர்னா செய்தார்கள்.

இதனை தொடர்ந்து ஸ்டார் அதிகம் பெற்று இருக்கும் போட்டியாளர்கள் அவர்களுக்குள் கலந்துபேசி ஒருவருக்கும் ஸ்டார் கொடுக்கலாம். அந்த ஒரு நபர் இரண்டு நபரை அடுத்த வார நாமினேஷனுக்கு நேரடியாக நாமினேட் செய்யலாம் என்ற பவர் கொடுக்கப்பட்டது. ஆனால், இன்னும் விஷ்ணு, யாரை தேர்தெடுத்துள்ளார் என்பதை காண்பிக்கவில்லை. இன்று வாரத்தின் முதல் நாள் என்பதால் இன்று நாமினேஷனும் நடைபெற இருக்கிறது.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் தனக்கு கிடைத்த பவரை வைத்து மாயா மற்றும் அக்ஷயாவை நேரடியாக நாமினேட் செய்துள்ளார் விஷ்ணு. மாயாவை நாமினேட் செய்ததும் ‘நீங்களாக தானே இப்படி நாமினேட் செய்தீர்கள். ரவீனா, மணி, விசித்ரா ஆகியோர்களின் டீலிங் அடிப்படையில் இதை செய்யவில்லயே என்று கேள்வி எழுப்பினார் மாயா. அதற்க்கு விஷ்ணு ‘இல்லை இது என் முடிவு என்று கூறிவிட்டார்.

விஷ்ணு நாமினேட் செய்ததில் மாயா நல்ல தேர்வு தான் என்ற போதிலும் அக்ஷயாவை ஏன் நாமினேட் செய்தார் என்று தான் புரியவில்லை. மாறாக பூர்ணிமாவை நாமினேட் செய்து இருக்கலாம் என்பதே பல ரசிகர்களின் கருத்து. இருந்தும் இன்று வாரத்தின் முதல் நாள் என்பதால் இன்று நாமிநேஷன் நடைபெறும். அதில் யார் யார் நாமினேட் ஆக போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement