83 படத்தில் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்டு உள்ள SK -அதுவும் எந்த கதாபாத்திரத்தில் தெரியுமா ?

0
420
sivakartikeyan
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் இன் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு ’83’ படம் உருவாகியிருக்கிறது. இந்திய அணி 1983 ஆம் ஆண்டில் கபில்தேவ் தலைமையில் வரலாற்று சிறப்புமிக்க உலக கோப்பையை வென்றது. அந்த வெற்றியை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருக்கும் படம் தான் 83. அதுமட்டுமில்லாமல் இந்தியாவில் கிரிக்கெட் போட்டி இந்த அளவிற்கு பிரபலமாக இருப்பதற்கும் இந்த உலக கோப்பையின் வெற்றி ஒரு முக்கிய காரணம். அதற்குப் பிறகு கிட்டத்தட்ட 28 ஆண்டுகளுக்கு பிறகு 2011 ஆம் ஆண்டில் மகேந்திர சிங் தோனி தலைமையில் இந்திய அணி இரண்டாவது முறையாக உலக கோப்பையை கைப்பற்றியது.

-விளம்பரம்-

டோனி பெற்ற கோப்பை பலருக்கும் தெரிந்தது. ஆனால், கபில்தேவ் கண்ட முதல் வெற்றி பலருக்கும் தெரியாத ஒன்று. அந்த சாதனையை மீண்டும் ரசிகர் கண்முன் கொண்டு வரத்தான் இந்த படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். மேலும், இந்த படத்தினை கபீர் கான் இயக்கியிருக்கிறார். இது கபில் தேவின் உண்மைக் கதை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் கபில் கதாபாத்திரத்தில் ரன்வீர் சிங் நடித்து இருக்கிறார். அப்போதைய தமிழக கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் கதாபாத்திரத்தில் நடிகர் ஜீவா நடித்துள்ளார்.

- Advertisement -

மேலும், கபிலின் மனைவியாக ரோமியோ பாடியா இடத்தில் தீபிகா படுகோன் நடித்து இருக்கிறார். இருவரும் திருமணம் முடிந்த பிறகு இணைந்து நடிக்கும் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் டிசம்பர் 24ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. கடந்த ஆண்டு ரன்வீர்சிங் தன்னுடைய பிறந்த நாளன்று 83 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டிருந்தார். இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அதில் அவர் கபில்தேவ் போன்று அப்படியே இருந்தார். அதோடு இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் வெளியாக இருக்கிறது. இதனால் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் ஸ்ரீகாந்த் கதாபாத்திரத்தில் ஜீவாவிற்கு பதிலாக முதலில் நடிக்க இருந்த நடிகரின் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ஆமாங்க, ஜீவா நடித்த கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடிகர் சிவகார்த்திகேயன் தான் நடிக்க இருந்தது. மேலும், ஸ்ரீகாந்தின் முக அம்சம் சிவகார்த்திகேயனுக்கு சரியாக இருக்கும் என்பதால் அவரை தான் முதலில் அணுகி இருந்தனர். ஆனால், அப்போது அயலான் பட காரணமாக சிவகார்த்திகேயன் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போனதாக கூறப்படுகிறது. அதற்குப் பிறகு தான் ஜீவா ஒப்பந்தமாகி இந்த படத்தில் நடித்தார். சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்து இருந்த டாக்டர் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றிருக்கிறது. அதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் டான், அயலான் போன்ற படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

-விளம்பரம்-
Advertisement