புதிய அவதாரம் எடுத்த நித்யா..! பெயரை மாற்றிவிட்டார்..! இனி நித்யா இல்லை.! என்ன பெயர் தெரியுமா.?

0
1981
Nithya-Bigg-Boss
- Advertisement -

பிரபல காமெடி நடிகர் பாலாஜியின் மனைவியான நித்யா பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்றிருந்தார். கடந்த ஞாயிற்று கிழமை நடந்த நிகழ்ச்சியில் பிக் பாஸ் வீட்ல இருந்து 3வது போட்டியாளராக வெளியேறினார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்றுள்ள நித்யா பிக் பாஸ் பெற்ற அனுபவத்தையும் தனது வாழ்வில் நடந்த சில சம்பவங்களையும் பற்றி தெரிவித்திருந்தார்.

-விளம்பரம்-

Nithya

- Advertisement -

அது போக “நித்யா” என்ற தனது பெயரையும் “தேஜு” என்று மாற்றியுள்ளாராம். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற இவர் தனது சொந்த வாழ்வில் பல்வேறு இன்னல்களை சந்தித்துள்ளாராம்.

ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சில் பங்குபெற்ற பின்னர் புதிய உத்வேகத்தை பெற்றுள்ளாராம். சமீபத்தில் தனது பெயரை மாற்றியது குறித்து தெரிவித்துள்ள நித்யா “என்னுடைய பெயரை “தேஜு” என்று மாற்றிக்கொண்டுள்ளேன். நித்யா என்ற பெயரில் நான் பல பிரச்னைகளை சந்தித்துள்ளேன். அதே போல அந்த பெயர் எனக்கு ஒரு நெகடிவ் இமேஜை தான் பெற்று தந்தது.

-விளம்பரம்-

bigg-boss-tamil nithya

அதனால் தான் நான் என்னுடைய பெயரை ‘தேஜு’ என்று மாற்றிக்கொண்டேன். தேஜு என்றால் போராளி என்று அர்த்தம். நான் ஒரு பெரிய பிரச்சனை மற்றும் போராட்டத்திலிருந்து மீண்டு வந்துள்ளேன். ஆனால் “தேஜு” என்ற இந்த பெயரில் நான் பாசிட்டிவான வாழ்க்கையை வாழ்வேன் என்று நம்புகிறேன். கண்டிப்பாக பல பெண்களுக்கு உதாரணமாகவும் இருப்பேன். ” என்று நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.

Advertisement