மஹத் – யாஷிகா சில்மிஷம்..!சிம்பு கொடுத்த அதிரடி பதில்.! என்ன சொன்னார் தெரியுமா..?

0
1044
Simbu

நடிகர் மஹத் பிக் பாஸ் வீட்டில் பெண்களிடம் அநாகரீகமாக நடந்து வருவதை குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றது. அதிலும் குறிப்பாக அவர் யாஷிகாவுடன் சேர்ந்து செய்யும் பல்வேறு அத்துமீறல்கள் பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைக்கிறது.நடிகர் மஹத் சில வாரங்களுக்கு முன்னர் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் பெண்கள் அறையில் நடிகை யாஷிகா மற்றும் ஐஸ்வர்யாவுடன் இரவு நேரத்தில் ஒன்றாக படுக்கையில் படுத்து உறங்கி கொண்டிருந்தார்.

mahat
இந்த காட்சி வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருந்தது. மேலும், நடிகர் கமலும் இதுகுறித்து மறைமுகமாக நடிகர் மஹத்தை கண்டித்திருந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகர் மஹாதின் நண்பரும் நடிகருமான சிம்புவிடம், நடிகர் மஹத் செய்த இந்த செயல் குறித்து கருத்து கேட்கப்பட்டுள்ளது. இது குறித்து பதிலளித்துள்ள சிம்பு “அவன் பெண்கள் மீது கை வைக்கிறான், பெண்கள் நடுவில் படுத்துக் கொள்கிறான் என்றெல்லாம் கேள்விபட்டேன். ஆனால், அதை நான் இன்னும் பார்க்கவில்லை.

mahat

அவன் பெண்கள் மத்தியில் படுத்துக் கொண்டிருக்கும் ஒரு புகைப்படத்தை மட்டும் தான் பார்த்தேன். ப்ளேடி பெல்லோ, ஜாலியா இருக்கான். அவனுக்கு ஏற்கனவே ஒரு காதலி இருக்கிறார். அப்படி இருந்தும் அவன் அப்படி செய்கிறான் என்றால், அவன் எதோ விளையாடுகிறான் என்று தான் தோன்றுகிறது” என்று கிண்டலாக கூறியுள்ளார்.