உங்கள இப்படி தான் Brand பண்ணுவாங்க, முன்னேறி வாங்க – நிக்சனுக்கு ஆதரவா கமல் பேச காரணம் என்ன?

0
210
Nixen
- Advertisement -

கமல் பாரபட்சம் பார்க்கிறார் நெட்டிசங்கள் விமர்சித்து வரும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 69 நாட்களை கடந்து இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள். கடந்த சில வாரமாகவே பிக் பாஸ் நிகழ்ச்சி அனல் பறந்து கொண்டிருக்கின்றது.

-விளம்பரம்-

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் கோல்ட் ஸ்டார் டாஸ்க் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதில் விக்ரம் வெற்றி பெற்றார். பின் நிக்சன்- அர்ச்சனா இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்ப்பட்டது. அப்போது அர்ச்சனாவை கறி துப்பி, வாடி போடி, நாயே, நான் கலாய்க்க ஆரம்பித்தால் 3 நாள் அலுவ, மூஞ்ச பாரு கருமம், சும்மா வினுஷா, வினுஷானு சொன்ன சொருகிடுவேன் என்று எல்லை மீறி மிரட்டி இருந்தார் நிக்சன். இதைப் பார்த்த மணி, ட்ரூ கலர் வெளியே வந்துடுச்சு பாத்தியா? என்று ரவீனாவிடம் கூறுகிறார்.

- Advertisement -

பிக் பாஸ் 7:

அதற்கு பிறகு தினேஷ் , நிக்சன் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது கோபத்தில் தினேஷ், தௌலத் என்ற வார்த்தையை ஒரு விதமான உடல் மொழியுடன் பேசி இருந்தார். இதற்கு நிக்சன் கடுமையாக பேசி இருந்தார். இந்த நிலையில் இது குறித்து நேற்றைய எபிசோடில் கமல் வெளுத்து வாங்கி இருக்கிறார். முதலில் அர்ச்சனா உரிமை குரலில் எழுப்பி இருந்தார். இதனால் கமல் நிக்சனை விசாரித்தார். அதில், சொருகிடுவேன் என்று சொல்கிறீர்களே எங்கே சொருகுவீர்கள்? இங்கேயா என்று வயிற்றை, மார்பை, கண்ணை எல்லாம் கோபத்தில் காண்பிக்கிறார் கமல்.

நேற்றைய கமல் எபிசோட்:

அதற்கு நிக்சன், நான் கோபத்தில் சொன்னேன் மன்னித்து விடுங்கள் என்று சொல்கிறார். இன்னொரு முறை இந்த மாதிரியான வார்த்தைகள் இந்த வீட்டில் பேசக்கூடாது. அப்படியே பேசினால் ரெட் கார்ட் கொடுத்து அனுப்பிவிடுவேன் என்று நிக்சனுக்கு மஞ்சள் கார்ட் காண்பித்தார் கமல். அதற்குப் பின் தினேஷ், மணி பேசியதற்கு கண்டனம் தெரிவித்தார் கமல். அதோடு இன்னொரு முறை வன்முறையாக பேசினாலோ, பிறரை கடுமையாக பேசினாலோ ஸ்டிரைக் கார்டை கொடுப்பேன் என்று எச்சரித்திருந்தார்.

-விளம்பரம்-

நிக்சனுக்கு குரல் கொடுத்த கமல்:

பின் கமல் நிக்சனை பார்த்து, சில நேரங்களில் நீங்கள் உடல்மொழியை மாற்றி பேசுகிறீர்கள். இனி அப்படி நடந்து கொள்ளக் கூடாது. அர்ச்சனா உங்கள மாறி இல்லாமல் என்ன பேசணும் பேசக்கூடாது என்று வீட்டுப்பாடம் செய்துவிட்டு வராங்க. ஆனால், நீங்கள் அதை எல்லாம் யோசிக்காமல் தகாத வார்த்தைகளால் பேசுகிறீர்கள். இந்த மாதிரி பேசுவதால் தான் உங்களை பிராண்ட் பண்ணுறாங்க, புரியுதா? எனக்கு வர கோபத்தை விட உங்களுக்கு தான் நிறைய கோபம் வரணும். ஆனால், அந்த கோபம் வரும்போது சொருகிடுவேன் என்று சொல்லக்கூடாது.

நெட்டிசன்கள் விமர்சனம்:

இனி மாறிடுவேன் என்று காட்டணும். இந்த உலகம் உங்களை தூண்டிவிட்டு தான் இருக்கும். நீங்க அதையெல்லாம் தாண்டி தான் முன்னேறனும். எந்த ஏரியாவில் இருந்தும் கூட பிஹெச்டி, கலைஞர், ரவுடி வரலாம். எதுவாக வரணும் என்பதை நீங்க தான் முடிவு பண்ணனும். அதை இன்றைக்கே முடிவு பண்ணுங்க என்று கமல் அறிவுரை கூறியிருந்தார். இப்படி கமல் தனக்கு ஆதரவாக நின்று பேசியது நிக்சனுக்கு சந்தோஷமாக இருந்தது. ஆனால், கமல் நடந்து கொண்டதை நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.மேலும், நிக்சன் பகுதியில் உள்ள மக்களே நிக்சன் பேசியது தப்பு தான், இப்படி எல்லாம் வெளியில் வந்து பேசினால் செருப்ப கழட்டி அடிப்பாங்க என்று கூறியுள்ளனர்.

Advertisement