லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து மனம் திறந்து நடிகை நயன்தாரா அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மலையாளத்தில் ஒரு லோக்கல் சேனலில் தொகுப்பாளனியாக தன்னுடைய பயணத்தை தொடங்கிய நயன் இன்று இந்திய சினிமாவில் ஒரு டாப் நடிகையாக திகழ்ந்து வருகிறார். தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக லேடி சூப்பர் ஸ்டாராக கலக்கி கொண்டிருக்கிறார் நயன்தாரா.
இவர் முன்னணி நடிகை மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் திகழ்ந்து கொண்டு இருக்கிறார். அது மட்டுமில்லாமல் சமீப காலமாக இவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். அந்த வகையில் நயன் நடிப்பில் வெளிவந்த படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. மேலும், சமீபத்தில் நயன் நடித்த படம் ஜவான். இந்த படத்தை அட்லீ இயக்கி இருந்தார்.
அன்னபூரணி படம்:
இந்த படத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோன், விஜய் சேதுபதி உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படம் வெளியாகி 1100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதனை அடுத்து நயன்தாராவின் நடிப்பில் தற்போது வெளியாகியிருக்கும் படம் அன்னபூரணி. இந்த படத்தை இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் நயன்தாராவுடன் ஜெய், சத்யராஜ், கே எஸ் நயன்தாராவுடன் ரெடின் கிங்ஸ்லி, சுரேஷ் சக்கரவர்த்தி உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.
நயன் பேட்டி:
இந்த படம் முழுக்க முழுக்க சமையலை மையமாக வைத்து இயக்குனர் கொடுத்து இருக்கிறார்கள் . இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படம் குறித்து படக் குழுவினர் சமீபத்தில் பேட்டி அளித்து இருக்கிறார்கள். அதில் நயன்தாராவும் கலந்திருக்கிறார். அப்போது நயன்தாரா, லேடி சூப்பர் ஸ்டார் என்று சொல்லாதீர்கள். அது சொன்னாலே என்னை திட்டுகிறார்கள். இன்னும் நான் அந்த இடத்திற்கு வரவில்லையா? அல்லது பெண் என்ற காரணத்தினால் அது இருக்கக் கூடாது? என நினைக்கிறார்களா என்று தெரியவில்லை.
லேடி சூப்பர் ஸ்டார் குறித்து சொன்னது:
பத்து பேர் லேடி சூப்பர் ஸ்டார் என்று பெருமையாக சொல்கிறார்கள் என்றால் 50 பேர் அதை சொல்லி திட்டுகிறார்கள். நான் செய்ய விரும்பும் கதைகள் எதுவும் அந்த டேகுக்காக கிடையாது. ரசிகர்கள் கொடுத்திருக்கும் அன்புக்காக தான். அதை நான் எடுத்துக் கொண்டேன் என்று கூறியிருந்தார். உடனே நடிகர் ஜெய், அந்த 50 பேர் திட்டி கொண்டு தான் இருப்பார்கள். நான் சமீபத்தில் ஒரு திருமணத்திற்கு போயிருந்தேன்.
நயன் குறித்து சொன்னது:
அப்போது அங்கிருந்த ஒருவர், அடுத்து நீங்க லேடி சூப்பர் ஸ்டார் உடன் தானே நடிக்கிறீர்கள்? என்று கேட்டார். அந்த படம் நயன்தாராவுக்காகவே கொடுக்கப்பட்டது என்றெல்லாம் கூறியிருந்தார். காரணம், இது நயன்தாரா உடைய 75வது படம். பொதுவாகவே நயன்தாரா தன்னுடைய படத்தின் விளம்பரத்திற்காக இசை வெளியீட்டு விழா, பேட்டி, ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபடுவதில்லை. ஆனால், இந்த படத்திற்காக அவர் பேட்டி கொடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.