என்னது 45 நாள் பிக் பாஸா ? – அதுவும் போட்டியாளர்கள் யார் தெரியுமா ? எத்தனை பேர் ? விவரம் இதோ.

0
415
biggboss
- Advertisement -

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது அந்த வகையில் விஜய் டிவியில் கடந்த நான்கு ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. சமீபத்தில் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் துவங்கியது. இந்த சீசனில் நமீதா மாரிமுத்து, நதியா சங் , அபிஷேக் ராஜா, சின்ன பொண்ணு, ஸ்ருதி, மதுமிதா, இசை வாணி, ஐக்கி பெரி , அண்ணாச்சி, அபிநய், பிரியங்கா, நிரூப், அக்ஷரா, வருண், பாவனி, அமீர், சஞ்சீவ், சிபி, தாமரை செல்வி என்று பலர் கலந்துகொண்டு இருக்கின்றனர்.

-விளம்பரம்-

Trpயில் சறுக்கிய பிக் பாஸ் :

இதில் 10 பேர் வெளியேறிய நிலையில் இன்னும் 10 பேர் பிக் பாஸ் வீட்டில் இருக்கின்றனர். இதில் இந்த வாரம் டபுள் ஏவிக்சன் நடைபெற இருக்கிறது. பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சி தான் விஜய் டிவிக்கு ஒரு Trp கிங்காக இருந்து வந்தது இதுவரை பிக் பாஸ் வரலாற்றில் இல்லாத அளவிற்கு, படு மோசமான TRP ரேட்டிங்கை கடந்த வாரம் ஒளிபரப்பான பிக் பாஸ் 5 நிகழ்ச்சி பெற்றுள்ளதாம்.

- Advertisement -

அதிலும், கடந்த வாரம் ஒளிபரப்பான பிக் பாஸ் 5 நிகழ்ச்சி, 2.75 வரை மட்டுமே பெற்றுள்ளதாம். இது பிக் பாஸ் வரலாற்றில் மோசமான TRP ரேட்டிங் என்று கூறப்படுகிறது. தமிழைப் போல பிக்பாஸ் நிகழ்ச்சி தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என்று பல்வேறு மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் இந்தியில்தான் 15 வருஷங்களுக்கு மேல் கடந்து சென்றுகொண்டே இருக்கிறது.

Is Karan Johar A Biased Host On Bigg Boss OTT? Here's What Contestant  Ridhima Pandit Has To Say | IWMBuzz

OTTயில் பிக் பாஸ் :

சொல்லப்போனால் இந்தி bigboss2 தான் மற்ற மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஹிந்தி பிக் பாஸை பார்த்து தான் மற்ற மொழிகளில் காப்பி அடிப்பார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு இந்தியில் பிக்பாஸ் நிகழ்ச்சி Ottயில் ஒளிபரப்பானது. அதாவது தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் வேறு இந்த பிக் பாஸ் வேறு.

-விளம்பரம்-

24/7 ஒளிபரப்பு :

Voot Ottயில் ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சியை கரன் ஜோகர் தொகுத்து வழங்கி இருந்தார். மேலும், இந்த நிகழ்ச்சியில் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர்கள் 13 பேர் கலந்துகொண்டனர். மொத்தம் 42 நாட்கள் மட்டுமே இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பானது. மேலும், இது Voot Ottயில் மட்டுமே ஒளிபரப்பானது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் யார் Host :

அதிலும் Voot சந்தாதாரகர்கள் இந்த நிகழ்ச்சியை 24 மணி நேரமும் கண்டுகளிக்கலாம். அதாவது பிக் பாஸ் வீட்டை 24 மணி நேரமும் பார்க்க முடியும். தற்போது இதே கான்சப்டில் இந்த நிகழ்ச்சியில் தமிழிலும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், தமிழில் ஹாட்ஸ்டாரில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது.இதில் தமிழ் பிக் பாஸில் கலந்துகொண்ட சீசன் 1 முதல் 5 வரையிலான போட்டியாளர்கள் கலந்துகொள்ள உள்ளனர். ஆனால், இந்த நிகிழ்ச்சியை கமல் தொகுத்து வழங்குவாரா இல்லை வேறு யாராவது தொகுத்து வழங்குவாரா என்பது தான் கேள்வி.

Advertisement