மோடிக்கு எதிராக ட்வீட் போட்டு சிக்கலில் சிக்கிய ஓவியா – போலீசில் புகார்.

0
799
oviya
- Advertisement -

மோடிக்கு எதிராக ட்வீட் போட்டதால் சிக்கலில் சிக்கி இருக்கிறார் நடிகை ஓவியா. பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக நேற்று (பிப்ரவரி 14) சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு எதிராக #GoBackModi என்ற ஹாஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகிவந்தது . விவசாய போராட்டம் உச்சத்தில் இருக்கும் நிலையில், புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறாமல் இருக்கும் நிலையில் பிரதமர் மோடி தமிழகம் வருவதால் அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து #GoBackModi என்ற ஹேஷ்டேக்கினை டுவிட்டரில் டிரெண்டாக்கி வந்தனர்.

-விளம்பரம்-

பிரதமர் மோடி வருகை தமிழகத்திற்கு கருப்பு தினம் என்று கூறி நெட்டிசன்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.பிரதமர் மோடி ஒவ்வொரு முறை தமிழகம் வரும் போதும் #GoBackModi ஹேஷ்டாக் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆவது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், பெரும்பாலான சினிமா பிரபலங்கள் இது பற்றி எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருக்கையில் நடிகை ஓவிய #GoBackModi என்ற ஹேஷ் டேக்கை தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இதற்கு பிக் பாஸ் நடிகை காஜல் பசுபதியும் ஆதரவு தெரிவித்து இருந்தார்.

இதையும் பாருங்க : காதலர் தினத்தில் நீச்சல் உடையில் புகைப்படங்களை வெளியிட்ட பிரபல சன் மியூசிக் தொகுப்பாளினி.

- Advertisement -

ஆனால், மோடியின் ஆதரவாளர்கள் பலரும் ஓவியாவிற்கு கண்டனம் தெரிவித்தனர். ஓவியாவின் இந்த டீவீட்டிற்கு நடிகையும் பிக் பாஸ் போட்டியாளருமான காயத்ரி ரகுராம் ட்வீட் ஒன்றைபோட்டிருந்தார். அதில், #வாயை_ மூடு_போடி சும்மா ரைமிங். உன்னை மரியாதை குறைவாக எதுவும் பேசவில்லை. பிக் பாஸில் உனக்கு எதிராக தான் இருந்தேன். ஆனால், நான் சரியானதை தேர்வு செய்து இருக்கிறேன். என்று பதிவிட்டுள்ள காயத்ரி ரகுராம், ஓவியாவை திமுக கட்சியினர் விலைக்கு வாங்கி இருப்பதாகவும் கூறி பதிவிட்டு இருந்தார்.

ஓவியா மீது பா.ஜனதா கட்சியாளர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர். தமிழக பா.ஜனதா பொதுச் செயலாளர் அலெக்ஸ் சுதாகர், சி.பி.சி. ஐ.டி. சைபர் குற்றப்பிரிவு போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில், சில அரசியல் கட்சிகள் சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் அமைதி மற்றும் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க ஹேஷ்டேக்கை உருவாக்கி உள்ளனர்.பிரதமர் மோடியை குறிவைத்து நமது நாட்டின் இறையாண்மைக்கு எதிராக சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை உருவாக்க சீனா, இலங்கை போன்ற நாடுகள் முயற்சி செய்கின்றன. அவர்களின் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக நடிகை ஓவியா உள்ளிட்ட சிலர் செயல்படுகிறார்கள். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி உள்ளனர்.

-விளம்பரம்-
Advertisement