விநாயகர் சீரியல் நடிகையின் காதலுக்கு டிமிக்கு கொடுத்த பிக் பாஸ் நடிகர். யாருனு பாருங்க.

0
21162
akansha

இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் நடிகர் கார்த்திக் நடிப்பில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான ‘அலெக்ஸ்பாண்டியன்’ படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற தவறியது. இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக அனுஷ்காவும் மேலும், மூன்று பெண்களும் நடித்திருந்தனர். இந்த படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் சந்தானம் நடித்திருந்தார். அவருக்கு தங்கையாக மூன்று பெண்கள் நடித்திருந்தனர். அதில் ஒருவர் தான் மாடல் அழகியும் நடிகையுமான அகன்ஷா பூரி. மத்யபிரதேச மாநிலத்தை சேர்ந்த இவர், முதலில் மாடலிங் துறையில் இருந்து வந்தார்

akanksha puri lover க்கான பட முடிவு

- Advertisement -

அதன் பின்னர் தமிழில் அலெக்ஸ்பாண்டியன் படத்தின் மூலம் திரையுலகில் கால் பதித்தார். அதன் பின்னர் தமிழில் ‘திஹார்’ என்ற படத்திலும் நடித்துள்ளார். மேலும், மலையாளம், கன்னடம் என்று ஒரு சில படங்களில் நடித்த இவர், பின்னர் சினிமாவில் வாய்ப்பு குறையவே சீரியல் பக்கம் திரும்பிவிட்டார். தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘விநாயகர்’ என்ற பக்தி தொடரில் பார்வதி தேவியாக நடித்து வந்தார்.சமீபத்தில் விஷால் நடிப்பில் வெளியான ‘ஆக்ஷன் ‘ படத்திலும் வில்லையாக நடித்திருந்தார்.

இதையும் பாருங்க : பேட்ட வில்லன் நடிகர் வீட்டில் நேர்ந்த சோகம். திரையுலகினர் அஞ்சலி

ஆகான்ஷா பூரி கடந்த மூன்று ஆண்டுகளாக நடிகர் பராஸ் சாப்ராவுடன் காதலில் இருந்து வந்தார். ஆனால், தற்போது இவர்கள் இருவரும் பிரிந்துள்ளனர். ஏனெனில் அகன்ஷா, பராஸ் கையில் அகன்ஷாவின் பெயரை தனது கையில் பச்சை குத்துமாறு கட்டாயப்படுத்தியதாகவும், ஆனால், தான் ஒப்புக்கொள்ளாததால் அவர் பிரிந்து விட்டதாகவும் கூறினார் பராஸ். மேலும், சல்மான் கான் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ் 13’ நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களில் சாப்ராவும் ஒருவர், அவர் மற்ற போட்டியாளர்களுடன் சகஜமாக பழகி வந்தார் . ஆனால், அதனையும் அகன்சவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும் கூறபடுகிறது.

-விளம்பரம்-

சமீபத்தில் அகன்ஷா பூரிக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவர் தனது பெண்ணைச் சந்திக்கவில்லை, பின்னர் ‘பிக் பாஸ்’ செட்டுக்குத் திரும்பினார், இது பிரச்சினையை மேலும் தூண்டியது. சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய அகன்ஷா, இது கட்டாய உறவு அல்ல. நான் நிதி மற்றும் உணர்ச்சி ரீதியாக வலுவானவன், என் வாழ்க்கையில் எனக்கு ஒரு மனிதன் தேவையில்லை. எங்கள் உறவு முடிந்துவிட்டது என்று அவர் என்னிடம் சொன்னால், அவரை விடுவிப்பதில் நான் மகிழ்ச்சியடைவேன். பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றபோது, ​​அவர் விளையாடுவதற்கு எதையும் செய்வார் என்று நாங்கள் உரையாடினோம், ஆனால் அவர் எங்கள் உறவை கெடுப்பார் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை. என்று கூறிய இருந்தார் அகன்ஷா.

Advertisement