இப்போ தான் சார் பிக் பாஸே புரியுது – அர்ச்சனாவை மறைமுகமாக தாக்கும் பாலாஜி.

0
692
balaji
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் வெற்றிகரமாக 3 வாரத்தை நிறைவு செய்ய இருக்கிறது. இந்த நேரம் பிக் பாஸ் வீட்டில் ஏதாவது ஒரு கலவரம் வெடித்து இருக்க வேண்டும். ஆனால் இதுவரை சுரேஷ் சக்கரவர்த்தியால் மட்டும்தான் பிக் பாஸ் வீட்டில் அவ்வப்போது பிரச்சினைகள் ஏற்பட்டு அடங்கி வருகிறது. தவிர வேறு யாராலும் சுவாரசியமான சம்பவங்கள் நடைபெறவில்லை. வைல்டு கார்டு போட்டியாளராக அர்ச்சனா சென்ற பின்னரும் நிகழ்ச்சி சூடு பிக்கடவில்லை.

-விளம்பரம்-

இந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனில் சுரேஷ், ஆரி, ஆஜித், அனிதா சம்பத், பாலாஜி முருகதாஸ் ஆகியோர் இடம் பெற்று இருக்கிறார்கள். இன்று வாக்களிக்க இறுதிநாள் இதுவரை பல்வேறு இணையதளங்களில் நடத்தப்பட்டுவரும் ஓட்டில் ஆஜித் தான் இறுதி இடத்தில் இருந்து வருகிறார். அவருக்கு முன்பாக அனிதா சம்பத் இருந்து வருகிறார். எனவே இம்முறை ஆஜித் வெளியேறினாலும் அவர் வைத்திருக்கும் எவிக்ஷன் ஃப்ரீ பாஸை வைத்து தப்பித்து விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல அதுவரை அவரிடமிருந்து அந்த பாஸை திருடாமல் இருக்க வேண்டும்.

- Advertisement -

இது ஒரு ஒருபுறம் இருக்க இந்த வாரம் முழுவதும் நடைபெற்ற டாஸ்கின் அடிப்படையில் நேற்று அடுத்த வாரம் தலைவர் பதவிக்காக போட்டியிடும் போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தது. இதில் அர்ச்சனா, பாலாஜி,சனம் ஷெட்டி ஆகிய மூவரும் அடுத்த வார தலைவர் பதவிக்கான போட்டியில் பங்குபெற இருக்கிறார்கள். இதில் தலைவராக தேர்ந்தெடுக்கப்படும் நபர் அடுத்த வாரம் நாமினேஷன் இல் இருந்து தப்பித்து விடுவார்.

இப்படி ஒரு நிலையில் இன்றைய மூன்றாவது ப்ரோமோ ஒன்று வெளியாக இருக்கிறது. அதில் பாலாஜி, கமலிடம் அர்ச்சனா தன்னை குழந்தை என்று சொன்னது குறித்து மறைமுகமாகச் சொல்கிறார். அதேபோல இப்போதுதான் எனக்கு இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி என்றால் என்ன என்று புரிகிறது என்று கூறியிருக்கிறார் பாலாஜி. நேற்றைய நிகழ்ச்சி கூட அர்ச்சனாவிற்கு பாலாஜி இருக்கும் ஒரு சிறிய மனஸ்தாபம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement