எனக்கே ரொம்ப புதுசா இருக்கு – அனிதா சம்பத் குறித்து அவரது கணவரே போட்ட பதிவு.

0
17438
anitha
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் கடந்த ஞாயிற்றுக்கிழமை அக்டோபர் நான்காம் தேதி கோலாகலமாக துவங்கியது இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான பல்வேறு போட்டியாளர்கள் இருக்கின்றார்கள் அதில் அனிதா சம்பத் ஒருவர் செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத் பின்னர் காப்பான் சர்க்கார் தர்பார் போன்ற பல்வேறு படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் இவருக்கென்று சமூகவலைதளத்தில் ரசிகர் பட்டாளமும் இருந்தது இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சி இடம் இவருக்கு ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

-விளம்பரம்-

ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஓரிரு நாட்களிலேயே ரசிகர்கள் மத்தியில் கொஞ்சம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறார் அனிதா சம்பத் சுரேஷ் சக்ரவர்த்தி விவகாரத்தில் அனிதா சம்பத்தின் பெயர் கொஞ்சமாக டேமேஜ் அடைய துவங்கியிருக்கிறது. இப்படி ஒரு நிலையில் அனிதா சம்பத் குறித்து அவரது கணவர் ஒரு உருக்கமான பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில், இன்னையோட 30 நாள் ஆச்சு. லவ் பண்ண டைம்ல இருந்து இப்ப வரைக்கும் இவ்வளவு நாள் நாம பார்த்துக்காம இருந்ததில்லை, இதான் முதல் தடவை. எனக்கே ரொம்ப புதுசா இருக்கு. உன்னை மிகவும் மிஸ் செய்கிறேன் செல்லம்மா என்று உருக்கமுடன் கூறியிருக்கிறார் .

- Advertisement -

ஏற்கனவே இன்ஸ்டாகிராமில் ஒரு ஸ்டோரி ஒன்றை போட்டிருந்த அனிதா சம்பத்தின் கணவர் ‘ஆமா அவ ரொம்ப ஷார்ட் டெம்பரான பொண்ணு அவளால சின்ன சின்ன இன்சல்டட் கூட தாங்கிக்க முடியாது. மூஞ்சிக்கு நேரா கேட்டுவா. யாராவது ஹர்ட் பண்ணிட்டா அதை ஈசியா மறந்துட்டு அவளால அவங்க கிட்ட பேச முடியாது. நல்லா நடந்துகிட்டா சின்னவங்க கிட்ட கூட அவ மரியாதையாக இருப்பா. ஆனால் பிரச்சனை பண்ணி சண்டை போட்டா, இன்சல்ட் பண்ணி பேசிட்டா பெரியவங்கள இருந்தாலும் மதிக்க மாட்டா. அண்ட் இதெல்லாம் ரொம்ப சரின்னு நான் சொல்ல. தப்புன்னா அதை மாற்ற பொண்ணு. ஆனா சரிண்ணா அது யாருக்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டா. இப்ப வரைக்கும் அவள் அவளா இருக்கா

இது ஒரு ஷோ இந்த ஷோவ பத்தி என்ன வேணும்னாலும், யார் வேணாலும் கமன்ட் பண்ணலாம் இவங்களை பற்றியும் கமெண்ட் பண்ணலாம். ஆனா அவங்க எல்லாமே பொய் சொல்றாங்க ஷோகாக சிம்பதிக்காக சொல்றாங்கன்னு சொல்ற சில பேருக்கு சொல்லிக்கிறேன். அம்மாவ பத்தி சொன்னது 100% உண்மை நாங்க லவ் பண்ண புதுசில இருந்தே என் கிட்ட சொல்லி பீல் பண்ணி இருக்கா. என் அம்மா கருப்பா இருப்பாங்க அதனால எங்கேயும் வர மாட்டாங்கன்னு.

-விளம்பரம்-

அவ எல்கேஜி ல இருந்து ஸ்டேஜ் எத்தனையோ அவார்டு வாங்கிட்டு இருக்கா. ஆனால் ஒரு இடத்துக்கும் அம்மா வரல இப்ப வரைக்கும் எந்த ஃபங்ஷனுக்கு கூட வர மாட்டாங்க ஒரு பொண்ணு புடிக்க, லவ் பண்ண எது வேணாலும் காரணமாக இருக்கலாம். எனக்கு அப்படி வனிதாவை எனக்கு புடிச்சது காரணமே அவ அவங்க ஃபேமிலிய கேர் பண்ணி பாத்துகிட்டது தான். உண்மையா அனிதா கிட்ட அவங்க ஃபேமிலி கிட்ட இருக்கு எல்லாமே அனிதா ஒரு ஒரு ரூபாய் சேர்த்து வச்சு வாங்கினது தான் எதுவுமே இல்லாமல் இருந்து இப்ப எல்லாமே இருக்கின்ற அளவுக்கு ஆக்குனது அவ மட்டும் தான் என்று கூறி கூறி இருந்தார்.

Advertisement