எங்க கைய வச்சி இருக்கீங்க பாருங்க, கையை எடுங்க ரஷிதா – சினுங்கிய ஆண் போட்டியாளர், வைரலாகும் வீடியோ.

0
592
rachitha
- Advertisement -

பிக் பாஸ் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்திருந்த பிக் பாஸ் சீசன்6 கடந்த மாதம் ஆரம்பித்து தற்போது கோலாகலமாக நடந்து வருகிறது. தொலைக்காட்சியிலும் ஓடிடியிலும் ஒன்றாக ஒளிபரப்பாகிவரும் இந்த நிகச்சியின் தொடக்கத்தில் குடும்பமாக இருந்த பிக் பாஸ் வீடு தற்போது ஒருவரை ஒருவர் அடித்துக்கொல்லும் அளவிற்கு இருந்து வருகிறது. ஜி.பி.முத்து, அசல் கோளாறு, மெட்டிஒலி சாந்தி மற்றும் செரீனா என நன்கு போட்டியாளர்கள் ஏற்கனவே பிக் பாஸ் வீட்டை விட்டு வெளிறியுள்ளனர். மீதமுள்ள 18 போட்டியாளர்களை வைத்து பிக் பாஸ் ரசிகர்களை மகிழ்விக்க பல்வேறு மாறுதல்களை பிக் பாஸ் நிகழ்ச்சியானது செய்து வருகிறது.

-விளம்பரம்-

குறிப்பாக தற்போது நடந்து வரும் டாஸ்கில் போட்டியாளர்கள் மிகவும் தீவிரமாக விளையாடி வருகின்றனர். இதனால் விறுவிறுப்பும் அதிகரித்து போட்டியாளர்களுக்கிடையே சண்டையும் நடந்து வருகிறது. இப்படி சண்டைகளுக்கிடையேயே சில அழகான காட்சிகளையும் பார்க்க முடிகிறது. மற்ற டாஸ்க்குகளை போல இல்லாமல் இந்த டாஸ்கில் போட்டியாளர்கள் இரண்டு டீம் களாக “கண்ணா லட்டு தின்ன ஆசையா” மற்றும் “ஆட தேனடை” என்ற மற்றொரு டீமாகவும் பிரிந்துள்ளனர். ஆனால் இதில் தான் பெரிய திருப்பமே இருக்கிறது.

- Advertisement -

அந்த திருப்பம் என்னவென்றால் கன்வேயர் பெல்ட் மூலம் உள்ளே இருந்து வரும் பொருட்களை எடுப்பதற்கு போட்டியாளர்கள் ஒருவரை ஒருவர் தள்ளிக்கொண்டு கன்வேயர் பெல்ட் பக்கத்தில் இருக்கின்றனர். இப்படி நிக்கும் போது போட்டியாளர்கள் ஒருவரை ஒருவர் தள்ளிக்கொண்டு உள்ளே இருந்து வருவதை எடுப்பதற்கு முயற்சி செய்கின்றனர். இதனால் போட்டியாளர்களுக்கிடையே தல்லுமுல்லு ஏற்பட்டு பல பிரச்சனைகள் ஏற்பட்டது.

அதிலும் மணிகண்டன் தனலட்சிமியை கீழே தள்ளிவிட இவர்களுக்கிடையே சண்டை மிகவும் கடுமையாக இருந்தது என்று சொல்லலாம். அனால் அதற்க்கு பிறகு இருவரும் சமாதனமாகி விட்டனர். இந்த சண்டைகளுக்கு மத்தியில் சில கியூட் காட்சிகளும் நடந்துதான் வருகிறது. அதாவது போட்டியாளரான ராம் உள்ளே இருந்து வரும் பொருட்களை எடுக்க தயாராக இருக்கும் போது ரக்சிதாவின் கை ராமின் மீது உரசிக்கிறது இதனால் ராம் தனக்கு வெட்கமாக இருக்கிறது கையை எடுங்கள், எங்கே கையை வச்சிருக்கீங்க பாருங்க என்று சொல்ல ரசித்தவும் அப்படியே கையை வைத்திருந்தார்.

-விளம்பரம்-

இப்படி கையை ரக்சிதா எடுக்காமல் அப்படியே வைத்திருந்ததால் மற்ற போட்டியாளர்களிடம் ரக்சிதா கையை எப்படி வைத்திருக்கிறார் பாருங்கள் என்று பஞ்சாயத்தை கூட்டினார் ராம். இப்படி பல சண்டைகளுக்கு மத்தியில் இப்படிப்பட்ட சில நிகழ்ச்சிகளும் நடக்கத்தான் செய்கிறது. இந்நிலையில் தான் தற்போது இந்த விடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement