தமிழ் கலாச்சாரம்..! பொன்னம்பலத்தை அசிங்கப்படுத்திய கமல்.! யாஷிகாவுக்கு ஆதரவா..? எது சரி..?

0
225
Ponnambalam

நடிகர் பொன்னம்பலம் பிக் பாஸ் வீட்டில் கொஞ்சம் சர்ச்சைக்குரிய நபராக காண்பிக்கபட்டு வருகிறார். ஆரம்பம் முதலே தமிழ் கலாச்சாரம் பற்றியும் பெண்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதையும் அழுத்தமாக கூறி வருகிறார். இதனை கமல் அவர்களே பல முறை ஆதரித்து வந்தார்.

bigg-boss-kamal

இந்நிலையில் நேற்று(ஜூலை 29) ஒளிபரப்பான நிகழ்ச்சியில் நடிகர் பொன்னம்பலம் மீது நடிகர் கமல் குறை கூறியது போல தான் தெரிந்தது. நேற்று அகம் டிவி வழியே போட்டியாளர்களை சந்தித்து பேசிக்கொண்டிருந்த கமல், பொன்னம்பலத்திடம் ‘ அடிக்கடி கலாச்சாரம் பற்றி பேசிக்கிறீர்களே அதற்கு என்ன காரணம் கொஞ்சம் விளக்கி கூறுங்களேன், என்றார்.

இதற்கு பொன்னம்பலம் ‘தமிழ் நாட்டிற்கு என்று ஒரு கலாச்சாரம் இருக்கிறது சார், இங்க வந்தா உற்றார் உறவினர் இருக்கும் கலாச்சாரத்தை அறிந்து தான் நடக்க வேண்டும், தமிழ் கலச்சாரத்தை எப்போதும் மதிக்க வேண்டும். பெண்கள் எப்போதும் நாகரிகமாக உடை அணிய வேண்டும்’ என்று கூறினார்.

ஆனால், இம்முறை கமல், நடிகர் பொன்னம்பலத்திற்கு ஆதரவாக பேசாமல் , என்ன உங்க கலாச்சாரம் நம் முன்னோர்கள் தலைமுறையில் பெண்கள் ஜாக்கெட் இல்லாமல் கூட தான் இருந்தாங்க, அப்போ தப்பா தெரியலையா? பெண்கள் என்ன ஆடை அணிய வேண்டும் என்பதற்கு கூடவா சுதந்திரம் இல்லை.பாக்கறவங்க கண்ல தான் இருக்கு என்று கூறி பொன்னம்பலத்தை ஆப் செய்தார்.

kamal

உடனே யாஷிகாவும் பெண்களை ஆடை வைத்து எடை போடாதீங்க புடவை கட்டினாலும், தாவணி கட்டினாலும் தான் இடுப்பு தெரியும் அதுக்காக அவங்க தப்பான பெண்களாக ஆகிடுவாங்களா என்று கூறினார். இதற்கு கமலும் ஆதரவு தெரிவிப்பது போல பேசி இருந்தார்.

பொன்னமபலம் தமிழ் கலச்சாரத்தை பற்றி தான் எப்போதும் குடை பிடித்து வருகிறார். சில வாரங்களுக்கு முன்னர் நடிகை ஐஸ்வர்யாவிற்கும் பொன்னம்பலத்திற்கும் வாக்கு வாதம் ஏற்பட்ட போது ஐஸ்வர்யா எங்கள் கலாச்சாரம் இது தான். என்னுடைய பெயர் கெட்டு போனால் உங்களுக்கு என்ன என்று பொன்னம்பலத்தை குறை கூறி இருந்தார். ஆனால், ஐஸ்வ்ர்யா, அவர்களுடைய கலாச்சாரத்தை பற்றி பேசியது குறித்து கமல் எந்த கேள்விவையும் முன் வைக்கவில்லை.ஐஸ்வர்யா அவர்களது கலாச்சாரத்தை பற்றி உரிமையாக பேசும் பொது, தமிழ் கலாச்சாரத்தை பற்றி பேச பொன்னம்பலத்துக்கு உரிமை இல்லையா..?கலாச்சாரம் என்பது இருக்கட்டும், ஆனால் பல கோடி மக்கள் பார்க்கும் இப்படிப்பட்ட நிகழ்ச்சியில் யாஷிகா, ஐஸ்வர்யா அநாகரிகமாக நடந்துகொள்ளும் விஷயம் பற்றி அவர்களுக்கு உணர்த்த மறந்தது ஏன்..?

Ponnambalam-bigg-boss

மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா, யாஷிகா ஆகியோர் அரைகுறை ஆடைகளில் தான் சுற்றி வருகின்றனர். இதனால் தான் பொன்னம்பலம் அவர்களை பற்றி அடிக்கடி குறை கூறி வருகிறார். பொன்னம்பலம் கூறும் அறிவுரைகளை ஏற்றுக் கொள்ளும்படி கமலும் கடந்த வாரம் கூறி இருந்தார். ஆனால், தீடீரென்று பொன்னம்மபலம் கலாச்சாரத்தை பற்றி பேசியதை கமல் விமர்சித்தது ஏன் என்ற கேள்வி தான் எழுகிறது.

போட்டியில் பெண் போட்டியாளர்களிடல் நடந்துக்கொண்ட விதத்தை தவறு என சுட்டிக்காட்டிய கமலுக்கு, யாஷிகா,ஐஸ்வர்யா, மஹத் செய்யும் செயல்கள் தவறு என ஏன் ஒரு முறை கூட பேசவில்லை.