பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் ராஜு ஜெயமோகன். இவரின் சொந்த ஊர் திருநெல்வேலி. இவர் பிஎஸ்சி விஷுவல் கம்யூனிகேஷன் முடித்துவிட்டு பல கனவுகளுடன் சினிமாவுக்குள் நுழைந்தார். முதலில் இவர் நடிகர் பாக்யராஜ் இடம் உதவி இயக்குனராக சில காலம் பணியாற்றியிருந்தார். அதன் பிறகு தான் விஜய் டிவியில் பிரபலமான சீரியல்களில் ஒன்றான கனா காணும் காலங்கள் கல்லூரி சாலை சீரியலில் நடித்தார். இதன் மூலம் தான் இவர் மக்கள் மத்தியில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து இவர் சரவணன் மீனாட்சி, ஆண்டாள் அழகர், பாரதி கண்ணம்மா போன்று பல சீரியலில் நடித்து இருந்தார்.
பின்பு கவின் நடிப்பில் வெளிவந்த நட்புனா என்னன்னு தெரியுமா படத்தில் லீட் ரோலில் ராஜூ நடித்திருந்தார். மேலும், பல போராட்டங்களுக்கு பிறகு நடிகர் ராஜூ அவர்கள் சின்னத்திரையில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். சின்னத்திரை பிரபலத்தின் மூலம் ராஜுவுக்கு பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் ராஜு கலந்து கொண்டு திறமையாக விளையாடி வந்தார்.
பிக் பாஸ் சீசன் 5ல் ராஜு:
இதனால் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர் கூட்டம் உருவாகி உள்ளது. மேலும், எல்லோரும் எதிர்பார்த்த மாதிரி ராஜு பிக் பாஸ் சீசன் 5ன் டைட்டில் பட்டத்தை தட்டி சென்றார். இந்த நிகழ்ச்சியில் இரண்டாவது இடத்தை பிரியங்கா, மூன்றாம் இடம் பவானி, நான்காவது இடம்- அமீர் பிடித்து உள்ளார்கள். மேலும், டைட்டில் வின்னருக்கு 50 லட்சம் பரிசு தொகை வழங்கப்பட்டது. இதை தவிர பிக்பாஸ் நிகழ்ச்சியில் 16 வாரங்கள் இருந்த ராஜுவிற்கு வாரத்திற்கு ரூ. 1.50 லட்சம் சம்பளம் என்ற அடிப்படையில் 21 லட்சம் வழங்கப்பட்டது. மொத்தமாக 71 லட்சத்தை ராஜு தட்டித் சென்றிருக்கிறார்.
சீரியலில் கத்தியாக ராஜு வருவாரா:
அதோடு பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் வருவதாக கூறப்படுகிறது. மேலும், ராஜூ அவர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பல்வேறு சேனல்களுக்கு பேட்டி அளித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் ராஜூ அளித்த பேட்டி வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதில் ராஜு பேசிக் கொண்டிருக்கும்போது திடீரென்று நடிகை காயத்ரி என்ட்ரி ஆகிறார். அப்போது ராஜுவும், காயத்ரியும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அதில் அவர்கள் கூறியிருப்பது, நீங்க எப்ப சீரியலில் நடிக்க போகிறீர்கள்? சூட்டிங்க்கு எப்ப வருவீர்கள் என்று காயத்திரி கேட்கிறார்.
ராஜு – காயத்திரி அளித்த பேட்டி:
ராஜு, எங்க ஷூட்டிங் நடக்குது என்று சொல்லு உடனே வருகிறேன் என்று விளையாட்டாக பதிலளிக்கிறார். காயத்ரி, நான் சூட்டிங் வர சொல்லவில்லை. கத்தியாக எப்போது வருவீர்கள்? எல்லோரும் மிஸ் பண்ணுகிறோம் என்று கேட்கிறார். அதற்கு ராஜு, எல்லோரும் அப்படியேதான் இருக்கிறார்களா? என்று கேட்டதும் காயத்ரி ஆமாம். நீங்கள் பிக்பாஸில் இருக்கிறீர்கள் என்று தெரியும். ஆனால், சீரியலில் நீங்கள் துபாய் போகிறீர்கள் என்று சொல்லி போட்டோவை வைத்து கதறி கதறி அழுகிறேன் என்று சொல்கிறார். உடனே ராஜு, இப்படிதான் சீரியலில் இவர்களுடைய அப்பா என்று ஒருவர் நடித்திருப்பார். அவர் நாலு நாள் தான் நடித்திருப்பார். பின் அவரை போட்டோவாக தொங்க விட்டு கதறி கதறி அழுவார். அவருக்கு இன்னும் சம்பளம் கொடுக்கவில்லை. ஆனால், அவருடைய போட்டோவை வைத்து கதறி அழுகிறார்.
வீடியோவில் 5 : 40 நிமிடத்தில் பார்க்கவும்
ராஜு சீரியலில் நடிக்க தயார்:
நான் துபாயில் இருந்து கிளம்பி வரணும். எழுத்தாளர்கள் கதை எழுதனும், ஸ்கிரிப்ட் ஒர்க் பண்ணனும். அதற்கு பிறகு தான் நான் வரமுடியும். எனக்கு சீரியலில் நடிக்க ஆர்வம் இருக்கு. கூப்பிட்டால் நான் வந்துடுவேன் என்று ராஜூ சொல்கிறார். இப்படி இவர் பேசிய வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்களும் அப்போ, கத்தி கதாபாத்திரத்தில் ராஜு நடிப்பார். அவரை மீண்டும் சீரியலில் பார்க்க ஆர்வமாக இருக்கிறது கதையை மாற்றுங்கள் என்று ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள். நாம் இருவர் நமக்கு இருவர் 2 சீரியலில் கத்தி கதாபாத்திரத்தில் ராஜு நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.