பிக் பாஸ் ராஜூவை ஆடிஷனிலேயே ரிஜெக்ட் செய்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் – அதுவும் எந்த கேரக்டர்னு பாருங்க.

0
161
raju
- Advertisement -

பிரபல சீரியலில் நடிக்க ஆடிசனுக்கு சென்ற பிக் பாஸ் ராஜீவை ரிஜெக்ட் செய்து இருக்கும் தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் வேற லெவெலில் மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் ராஜு ஜெயமோகன். இவரின் சொந்த ஊர் திருநெல்வேலி. இவர் பிஎஸ்சி விஷுவல் கம்யூனிகேஷன் படித்து முடித்துவிட்டு பல கனவுகளுடன் சினிமாவுக்குள் நுழைந்தார். இவர் சினிமாவில் இயக்குனரும், நடிகருமான பாக்யராஜின் உதவி இயக்குனராக சில காலம் பணியாற்றியிருந்தார்.

-விளம்பரம்-

அதன் பிறகு தான் விஜய் டிவியில் பிரபலமான சீரியல்களில் ஒன்றான கனா காணும் காலங்கள் கல்லூரி சாலை சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதன் மூலம் தான் இவர் மக்கள் மத்தியில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து இவர் சரவணன் மீனாட்சி, ஆண்டாள் அழகர், பாரதி கண்ணம்மா போன்று பல சீரியலில் நடித்து இருந்தார் .பின்பு கவின் நடிப்பில் வெளிவந்த நட்புனா என்னன்னு தெரியுமா படத்தில் லீட் ரோலில் நடிகர் ராஜூ நடித்திருந்தார். இந்த படம் மக்கள் மத்தியில் போதிய வரவேற்பு கிடைக்காததால் ராஜூ மீண்டும் சின்னத்திரை பக்கமே வந்துவிட்டார்.

- Advertisement -

ராஜூ குறித்த தகவல்:

மேலும், பல போராட்டங்களுக்கு பிறகு நடிகர் ராஜூ அவர்கள் சின்னத்திரையில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். சமீபத்தில் முடிவடைந்த நாம் இருவர் நமக்கு இருவர் 2 சீரியலில் கத்தி ரோலில் ராஜு நடித்து இருந்தார். இந்த சீரியலின் மூலம் ராஜு மக்கள் மத்தியில் பிரபலமானார். பின் ராஜுவுக்கு பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் ராஜு கலந்து கொண்டு திறமையாக விளையாடி இருந்தார். இந்த நிகழ்ச்சியின் மூலம் ராஜுவுக்கு ஏகப்பட்ட ரசிகர் கூட்டம் உருவானது.

பிக் பாஸ் வின்னர்:

வழக்கம் போல பிக் பாஸ் வீட்டுக்குள் ஆரம்பத்தில் போட்டியாளர்கள் ஆனந்தம், சந்தோஷம், கும்மாளம் என்று இருந்தாலும் போகப்போக போட்டி சச்சரவு சலசலப்பு என்று இருந்தார்கள். மேலும், எல்லோரும் எதிர்பார்த்த மாதிரி ராஜு பிக் பாஸ் சீசன் 5ன் டைட்டில் பட்டத்தை தட்டி சென்றார். இந்த நிகழ்ச்சியில் இரண்டாவது இடத்தை பிரியங்கா, மூன்றாம் இடத்தை பவானி, நான்காவது இடம்- அமீர் பிடித்து இருந்தார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ராஜு சீரியலில் என்ட்ரி கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

-விளம்பரம்-

விஜய் டிவியில் ராஜு:

ஆனால், ராஜு வெளிநாடு சென்று விட்டதாக அவருடைய கதையை முடித்து இருந்தார்கள். பிறகு ராஜுவுக்கு திரைப்படத்தில் நடிக்க நிறைய வாய்ப்புகள் வந்திருந்தது. சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த நான் படத்தில் கூட ராஜீ நெகட்டிவ் ரோலில் நடித்திருந்தார். இதனையடுத்து சினிமாவில் ராஜு கலக்கப் போகிறார் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கும் நிலையில் மீண்டும் அவர் விஜய் டிவிக்கே வந்து விட்டார். தற்போது இவர் பிபி ஜோடிகள் 2 நிகழ்ச்சியில்அங்கரிங்காக களம் இறங்கி இருக்கிறார். அதனை தொடர்ந்து இவர் ராஜு வூட்டுல பார்ட்டி என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.

நிகழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்:

இந்த நிகழ்ச்சியில் விஜய் டிவி பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு கலகலப்பாக சென்று கொண்டிருக்கின்றது. அந்த வகையில் கடந்த வாரம் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் குழுவினர் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர். அதில் தனம், ஜீவா, கதிர், மூர்த்தி இடம் ராஜூ பல கேள்விகளை கேட்டு இருந்தார். இந்நிலையில் ஜீவா மற்றும் கதிரிடம் பேசிய போது ராஜு கூறியது, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ஆடிஷனுக்கு வந்து இருந்தேன்.

சீரியல் வாய்ப்பு கிடைக்காத காரணம்:

எப்போதுமே கடுமையாக உழைக்கக் கூடிய உழைப்பாளி ரோல் என்று இயக்குநர் சொன்னதால் உயிரை கொடுத்து நடித்து காட்டினேன். ஆனால், கடைசியில் கேமராமேன் கேமராவை ஆஃப் பண்ணிவிட்டு எக்ஸ்பிரஷன் வரவில்லை என்று கூறி ரிஜக்ட் செய்து விட்டார். அதற்காக நான் பீல் செய்தேன். அதன்பின் சீரியலில் கதிரின் நடிப்பை பார்த்தவுடன், நம்மள மாதிரி தானே அவர் நடிக்கிறார். அப்போ ஏன் என்னை வேண்டாம் என்று சொல்லி விட்டார்கள் என்று நினைத்தேன். இப்படி ராஜூ கூறியிருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement