கையெடுத்து கும்பிட்டு ஓட்டு கேட்டும் கைவிட்ட ரசிகர்கள் – வைரலாகும் ஆயிஷா ராமின் உருக்கமான வீடியோ.

0
484
ayesha
- Advertisement -

இந்த வாரம் டபுள் ஏவிக்ஷன் என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது சனிக்கிழமையே ஒரு போட்டியாளர் வெளியேறி இருக்கிறார். விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி தற்போது 62 நாட்களை கடந்து இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் ஜிபி முத்து, அசீம் , அசல், ராபர்ட், ராமசாமி, ஏடிகே, ஜனனி, அமுதவாணன், விஜே மஹேஸ்வரி, விஜே கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரக்சிதா, மணிகண்டன், மெட்டி ஒலி சாந்தி, விக்ரமன், குயின்ஸி மற்றும் நிவாஷினி, சிவின் கணேசன் என 20 பேர் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

பின் முதல் வாரத்திலேயே வைல்ட் கார்ட் எண்ட்ரியாக மைனா நந்தினி வந்து இருந்தார். மேலும், இதுவரை இந்த நிகழ்ச்சியில் இருந்து ஜி.பி.முத்து, மெட்டிஒலி சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட், குயின்சி ஆகியோர் வெளியேறி இருக்கிறார்கள். 21 போட்டியாளர்களில் இருந்து 8 போட்டியாளர்கள் போக தற்போது 13 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் விளையாடி வருகின்றனர்.

- Advertisement -

தலைவராகி தப்பித்த மணி :

இந்த நிலையில் இந்த வாரம் டபுள் ஏவிக்ஷன் இருக்கும் என்று கடந்த வாரமே அறிவித்து இருந்தார் கமல். இந்த நிலையில் கடந்த வாரம் சிறந்த போட்டியாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட மணிகண்டன், சிவின், தனலட்சுமி ஆகியோருக்கு இந்த வாரத்திற்கான கேப்டன்சி டாஸ்க் நடத்தப்பட்டு இருந்தது. இதில் மணிகண்டன் வெற்றி பெற்று இந்த வார தலைவராகி விட்டார் இதனால் அவர் இந்த வார நாமினேஷனில் இருந்து தப்பித்து விட்டார்.

டபுள் எலிமினேஷன் :

அதேபோல கடந்த வாரம் நடைபெற்ற டாஸ்க் வெற்றி பெற்று தனலட்சுமி நாமினேஷன் ஃப்ரீ ஜோனில் சென்று விட்டார் அதனால் அவரும் இந்த வாரம் நாமினேஷனில் இருந்து தப்பித்து விட்டார். இப்படி ஒரு நிலையில் இந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனில் பெரும்பாலானோர் ஆயிஷாவின் பெயரை தான் கூறியிருந்தார்கள். அவரை தொடர்ந்து ஜனனி, ராம், அசீம், கதிர், adk ஆகியோர் இந்த வாரம் நாமினேட் ஆகி இருந்தனர்.

-விளம்பரம்-

தப்பித்த ஜனனி, Adk :

இந்த வாரம் டபுள் எவிக்ஷன் என்பதால் கண்டிப்பாக இந்த லிஸ்டில் இருந்து ராம் வெளியேறுவார் என்றுஎதிர்பார்க்கப்பட்டது. . ஏனெனில் இந்த சீசன் ஆரம்பித்ததில் இருந்தே ராம் பெரிதாக மக்களை கவரவில்லை. எனவே, அவர் வெளியேற அதிக வாய்ப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது . ஆனால், மீதமுள்ள ஜனனி, ராம், அசீம், கதிர், adk ஆகியோர்களில் யார் வெளியேறுவார் என்று கேள்வி எழுந்தது.

நேற்றே வெளியேறிய ராம் :

இந்நிலையில் டபுள் எவிக்ஷனில் வெளியேறி இருக்கும் நபர்கள் குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. இந்த வாரம் ராம் மற்றும் ஆயிஷா வெளியேறி இருக்கிறார்கள். பொதுவாக ஞாயிற்றுக்கிழமை தான் எலிமினேஷன் அறிவிக்கப்படும். ஆனால், இந்த வாரம் டபுள் ஏவிக்ஷன் என்பதால் சனிக்கிழமை டபுள் எவிக்ஷனில் வெளியேறிய முதல் போட்டியாளரின் பெயர் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதில் ராம் வெளியேற்றப்பட்டர். ஆனால், ஆயிஷா வெளியேறி இருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் அவரை விட weak போட்டியாளர்களாக இருக்கும் adk மற்றும் ஜனனி இந்த வாரம் காப்ற்றப்பட்டு இருக்கின்றனர். இதனால் இது மக்கள் முடிவல்ல விஜய் டிவி எடுத்த முடிவு என்று ஆயிஷாவின் ரசிகர்கள் புலம்பி கொண்டு வருகின்றனர்

கையெடுத்து கும்பிட்ட ராம் ஆயிஷா :

இப்படி ஒரு நிலையில் கடந்த வாரம் குயின்சி எலிமினேட்டானதை தொடர்ந்து ஆயிஷா மற்றும் ராம் இருவரும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.அதில் ராமிற்கு அடுத்த வாரம் பிறந்த நாள் வருவதாகவும், இதனால் ராமையும் ஆயிஷாவையும் வெளியேற்றாமல் பிக் பாஸ் வீட்டில் இருக்க வைக்க வாக்களிக்குமாறும் கையெடுத்து கும்பிட்டு கேட்டுக் கொண்டனர். மேலும், அடுத்த வாரம் ராம் தனது பிறந்தநாளை பிக் பாஸ் வீட்டில் கொண்டாடலாம் என்று ஆசைப்பட்டார். ஆனால், அந்த ஆசை நிறைவேறாமல் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

Advertisement