‘எந்த கடவுள் இப்படி ட்ரெஸ் போட்டு இருக்கு’ -ரம்யா பாண்டியனின் அம்மன் கெட்டப் போட்டோ ஷூட்டை திட்டி தீர்க்கும் ரசிகர்கள்.

0
2393
ramya
- Advertisement -

பொதுவாகவே தமிழ் சினிமாவுலகில் ஆக்ஷன், காமெடி, திரில்லர் என பல பாணியில் படங்கள் வெளிவந்தாலும் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெறும் படங்களில் சாமி படங்களும் ஒன்று. சினிமா தொடங்கிய காலத்தில் அதிகம் மக்களை கவர்ந்த படங்கள் என்றால் அம்மன் படங்கள் தான். அந்த வகையில் நடிகை கே ஆர் விஜயா முதல் ரம்யா கிருஷ்ணன் என பல நடிகைகள் அம்மன் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதை கவர்ந்து இருக்கிறார்கள். இன்றும் அவர்களுடைய அம்மன் கதாபாத்திரங்கள் மக்களிடம் வரவேற்கப்பட்டு தான் வருகிறது. இப்படி ஒரு நிலையில் நடிகை ரம்யா பாண்டியன் அம்மன் வேஷத்தில் போட்டோ ஷூட் எடுத்து வெளியிட்டுள்ள சம்பவம் சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

-விளம்பரம்-

தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் இளம் நடிகையாக ரம்யா பாண்டியன் திகழ்ந்து கொண்டு இருக்கிறார். இவர் 2015 ஆம் ஆண்டு வெளிவந்த டம்மி பட்டாஸ் என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகில் அறிமுகம் ஆனார். இதனை தொடர்ந்து இவர் ஜோக்கர், ஆண்தேவதை போன்ற சில படங்களில் நடித்தார். ஆனால், இவர் நடித்த படங்கள் பெரிய அளவில் வெற்றி கிடைக்கவில்லை என்பதால் அவருக்கு படவாய்ப்புகள் எதுவும் அமையவில்லை. இப்படி ஒரு நிலையில் தான் இவருக்கு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக்கு வித் கோமாளி சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெறும் வாய்ப்பும் கிடைத்தது.

- Advertisement -

விஜய் டிவி நிகழ்ச்சியில் ரம்யா பாண்டியன்:

இவர் என்னதான் படங்களில் நடித்திருந்தாலும் இவரை தமிழக மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தியது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். அதன் பின்னர் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றார். பின் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் ரம்யா பாண்டியன் போட்டியாளராக இருந்தார். இதன் மூலம் இவருக்கு என்று ஒரு தனி ஆர்மி உருவானது. இந்த நிகழ்ச்சியில் ரம்யா பாண்டியன் அவர்கள் கடைசி வரை தாக்குபிடித்து 100 நாட்கள் வரை இருந்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரம்யா பாண்டியன்:

பின் கடைசியில் வைத்த போட்டியில் கூட இவர் சிங்கம் பெண்ணாக வெளியேறியது அனைவருக்குமே தெரியும். மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதி போட்டி வரை வந்த ரம்யா பாண்டியனுக்கு நான்காம் இடம் தான் கிடைத்தது. கடைசியாக சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்திருந்த படம் ‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’. இதில் ரம்யா பாண்டியன் நடிப்பு வேற லெவல். இதை தொடர்ந்து ரம்யா பாண்டியன் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க, இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார்.

-விளம்பரம்-

ரம்யா பாண்டியனின் அம்மன் போட்டோஷூட்:

இவர் அடிக்கடி போட்டோ சூட் நடத்தி அந்த புகைப்படங்களை பதிவிட்டு வருவார். அதோடு இவர் இந்த அளவிற்கு பிரபலமான முக்கிய காரணமே இவர் வெளியிட்ட புகைப்படம் தான். அந்த அளவிற்கு அவருடைய புகைப்படங்கள் எல்லாம் கவர்ச்சியாகவும், அழகாகவும் இருக்கும். சமீபத்தில் கூட ரம்யா பாண்டியன் ஒரு கருப்பு சேலையில் எடுத்த போட்டோஷுட் புகைப்படம் வேற லெவல்ல இருந்தது. இது சோசியல் மீடியாவில் லட்சக்கணக்கில் லைக்குகளை குவித்து இருந்தது. இப்படி ஒரு நிலையில் நடிகை ரம்யா பாண்டியன் அம்மன் கெட்டப்பில் போட்டோ ஷூட் நடத்தி இருக்கிறார்.

கழுவி ஊற்றும் ரசிகர்கள்:

இந்த புகைப்படங்கள் எல்லாம் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வந்தாலும், பலர் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். அதுவும் அம்மன் போட்டோ ஷூட்டில் இவ்வளவு கவர்ச்சி காட்ட வேண்டிய அவசியம் இல்லை என்று தாறு மாறாக அவரை திட்டி தீர்த்து வருகிறார்கள் ரசிகர்கள். மேலும், எந்த கடவுள் இப்படி ஆடை அணிந்து இருக்கிறது என்றும் கடுப்பாகி இருக்கின்றனர்.

Advertisement