நான் பண்ண தப்ப ஒத்துக்குறேன், நீ இன்னோரு கல்யாணம் பண்ணிக்கோ – வீடியோ காலில் பேசிய ரேஷ்மாவின் முன்னாள் கணவர்.

0
1294
Reshma
- Advertisement -

“புஷ்பா புருஷன்” என்ற டயலாக் மூலம் மக்களிடையே பிரபலம் ஆனவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. சமீபத்தில் நடிகை ரேஷ்மா அவர்கள் டுவிட்டரில் வெளியிட்டு உள்ள புகைப் படத்தை பார்த்து ரசிகர்கள் பல கருத்துக்களை பதிவிட்டு இருந்தார்கள். அது மட்டும் இல்லாமல் இவரை தான் ரேஷ்மா அவர்கள் தற்போது மூன்றாவது திருமணம் செய்து கொள்ள உள்ளாரா? என்றும், அதற்காக தான் அவருடைய புகைப் படத்தை போட்டு உள்ளார் என்றும் கூறி உள்ளார்கள். இது தொடர்பாக இணையங்களில் பல சர்ச்சைகள் எழுந்து உள்ளது. மேலும், இவர் ஒரு விமான பணிப் பெண்ணாக பணி புரிந்து உள்ளார்.

-விளம்பரம்-

இதற்கு பிறகு தான் நடிகை ரேஷ்மா அவர்கள் தொலைக் காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக தான் முதலில் அறிமுகமானர். அதற்குப் பின்னர் அவர் சன் தொலைக் காட்சியில் பிரபலமான தொடர்களில் ஒன்றான “வம்சம்” என்ற தொடரின் மூலம் சின்ன திரையில் நடிக்க தொடங்கினார். இதனை தொடர்ந்து படங்களில் நடிக்கவும் வாய்ப்பு வந்தது. இவருடைய தந்தை பிரசாத் பசுபுலேட்டி அவர்கள் திரைப்பட தயாரிப்பாளர் ஆவார்.

- Advertisement -

மேலும், இவர் தயாரித்த “வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” என்ற படத்தில் ‘புஷ்பா’ என்ற கதாபாத்திரத்தின் மூலம் ரேஷ்மா அவர்கள் முதன் முதலாக சினிமா உலகிற்கு அறிமுகமானர். முதல் படத்திலேயே மக்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றார். இதை தொடர்ந்து நடிகை ரேஷ்மா அவர்கள் பல படங்களில் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக கலந்துகொண்டு இருந்தார். அதில் இவர் கூறிய கதைகள் ரசிகர்களை கண்கலங்க வைத்து.

திருமண வாழ்கை :

மேலும், நடிகை ரேஷ்மாவின் முதல் திருமணம் பெற்றோர்கள் பார்த்து அவர்கள் சம்மதத்துடன் நன்றாக கோலாகலமாக நடைபெற்ற திருமணம் ஆகும். ஆனால், சில வருடங்களிலேயே இவர்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக இவர்கள் இருவரும் பரஸ்பர விவாகரத்து பெற்று பிரிந்தார்கள். பின்னர் சில காலங்களில் இவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். ஆனால் இரண்டாவது திருமணத்திலும் இவருக்கு பல பிரச்சனைகள் ஏற்பட்டது. அதனால் அவருடனும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். தற்போது சீரியல்கள் மற்றும் படங்களில் நடித்து வரும் ரேஷ்மா பிசியாக நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

இரண்டாவது கணவர் வீடியோ :

இந்த நிலையில் தான் நடிகை ரேஷ்மா மற்றும் அவரது மகன் ராகுவும் ஒரு ஷாப்பிங் மாலில் ஷாப்பிங் செய்தபடி ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்திருக்கிறார். அந்த பேட்டில் திடீரென அவரது முன்னாள் கணவர் பேசிய வீடியோ ஒன்றை பகிர்ந்து ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளார். அவரது கணவர் கூறுகையில் “நடிப்பின் மீது கொண்ட ஆசை காரணமாக அவர் போராடி வருவதாகவும். தன்னுடைய மகனை இந்த அளவிற்கு வளர்த்து ஆளாக்கி இருப்பதை பார்க்கு போது தனக்கு பெருமையாக இருக்கிறது என்றும் கூறியுள்ளார்.

மூன்றாவது திருமணமா? :

மேலும் இரண்டாவது விவாகரத்திற்கு பிறகு யாரையும் திருமணம் செய்து கொள்ளாமல் மகனுடன் வாழ்ந்து வரும் ரேஷ்மா விரைவில் வேறு ஒருவரை திருமனம் செய்து கொண்டு அவருடன் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்றும் கூறியுள்ளார். அதோடு எந்த உதவி தேவைப்பட்டாலும் தன்னை நீங்கள் இரண்டு பேரும் என்னிடம் கேட்கலாம் என்றும் கூறியுள்ளார். இந்த வீடியோ வைரலான நிலையில் 3வது திருமணத்திற்கு நடிகை ரேஷ்மா தயாராகி விட்டாரா? என கமெண்ட் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

Advertisement