பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே அதில் காதலுக்கும் கிசுகிசு விற்கும் வஞ்சமே இருந்தது கிடையாது தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி இதுவரை 3 சீசன்களை கடந்துள்ளது. இந்த 3 சீசன்களிலும் ஏகப்பட்ட காதல் கதைகள் ஓடியது. ஆனால், ஒரு சில பெண் போட்டியாளர்கள் மட்டுமே இவ்வாறான சர்ச்சைகளில் இருந்து தப்பித்து விட்டார்கள். அந்த வகையில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் ஆன ரித்விகாவும் ஒருவர்.
நடிகை ரித்திகா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெறுவதற்கு முன்பாகவே சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். பாலா இயக்கத்தில் கடந்த 2011ம் ஆண்டு வெளியான பரதேசி படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன்பின்னர் மெட்ராஸ் படத்தில் மேரி என்ற கதாபாத்திரத்தில் நடித்த இவருக்கு சிறந்த துணை நடிகை என்பதற்கான விருதுகளும் கிடைத்திருந்தது. அதன் பின்னர் தொடர்ச்சியாக பல்வேறு படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.
பின்னர் இவருக்கு 2018 ஆம் ஆண்டு வெளியே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனில் பங்கு பெறும் வாய்ப்பும் கிடைத்தது.ஆனால், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவருக்கு பெயர் சொல்லும்படியான படவாய்ப்புகள் கிடைக்கவில்லை.இறுதியாக குண்டு என்ற படத்தில் நடித்திருந்தார்.
தற்போது மாடு, எம் ஜி ஆர், ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது போன்ற படங்களில் நடித்து வருகிறார். எப்போதும் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ரித்விகா அடிக்கடி ரசிகர்களுடன் சாட் செய்து அவர்கள் கேட்கும் பதில் அளிப்பது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் இவர் பதில் அளித்து கொண்டு இருக்கும் போது ரசிகர் ஒருவர், ஹாய் ஆண்டி, நான் உங்கள் ரசிகர், ஒரு ஹாய் சொல்லுங்க என்று கேட்டதர்க்கு ஹாய் அங்கிள் என்று கூலாக பதில் அளித்துள்ளார்.