தந்தையின் 45 வருட சொகுசு கார் கனவை நிறைவேற்றிய சாக்ஷி – என்ன கார் ? விலை மட்டும் எவ்ளோ தெரியுமா ?

0
374
sakshi
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பெரும் பிரபலமும் அடைந்தவர் சாக்‌ஷி அகர்வால். இவர் வட மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர் மாடலிங் மூலம் தான் சினிமாவுக்குள் நுழைந்தார். இதுவரை இவர் 100க்கும் மேற்பட்ட விளம்பர படங்களில் நடித்துள்ளார். இவர் திரைப்படத் துறையில் நுழைவதற்கு முன்பு ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வணிக ஆலோசகராக பணிபுரிந்து இருந்தார். பின்னர் 2018 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ஓராயிரம் கேணல் என்ற படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் முதன் முதலில் 2013 ஆம் ஆண்டு வெளிவந்த ராஜா ராணி படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் அறிமுகமானார். ஆனால், இவரை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தியது காலா படத்தின் மூலம் தான்.

-விளம்பரம்-

இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான ‘காலா’ திரைப்படம் மூலம் சாக்‌ஷி அகர்வால் ரசிகர்கள் மத்தியில் பரிச்சயமானார். இந்த படத்தில் சாக்ஷி அகர்வால் ரஜினியின் மருமகளாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து தல அஜித் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த விஸ்வாசம் படத்தில் மருத்துவராக சாக்ஷி அகர்வால் நடித்து இருந்தார். அதற்க்கு பின் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் சாக்ஷி அகர்வால் போட்டியாளராக கலந்து இருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் சாக்ஷி ஆரம்பத்தில் கவினை காதலித்து வந்தார். ஆனால், இடையில் இவர்கள் இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டு விட்டது.

- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் சாக்ஷி:

கவினை பற்றி அடுக்கடுக்கான குற்றசாட்டுகளை கூறி பல சிக்கலில் சிக்கி இருந்தார் சாக்ஷி. இதனாலே இவர் சீக்கிரம் வெளியேற்றப்பட்டார் என்று சொல்லலாம். இருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சாக்ஷி அகர்வால் பல படங்களில் கமிட்டாகி நடித்து இருந்தார். பிக் பாஸ் பிறகு இவர் சிண்ட்ரெல்லா என்ற படத்தில் நடித்து உள்ளார். கடைசியாக இவர் சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்த அரண்மனை 3 என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் சுந்தர் சி, ஆர்யா, ராசி கண்ணா, விவேக், யோகி பாபு உட்பட பலர் நடித்திருந்தார்கள். இந்த படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. இது ஒரு பக்கம் இருக்க, இவர் எப்போதும் சமூக வலைதளத்தில் ஆக்ட்டிவாக இருப்பார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சாக்ஷி:

அதனால் தான் அடிக்கடி நடத்தும் போட்டோஷீட் புகைப்படங்களை பதிவிட்டு வருவார். அதிலும் சமீபகாலமாக சாக்ஷி அகர்வால் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இதற்கு ரசிகர்கள் லைக்ஸ்குகளை அள்ளி குவித்து வருகிறார்கள். இந்நிலையில் நடிகை சாக்ஷி தன்னுடைய தந்தையின் பல நாள் கனவை நிறைவேற்றிய தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அப்படி என்ன சாக்ஸி தந்தையின் பல நாள் கனவு என்றால், சொகுசு கார் வாங்குவதாம். பொதுவாகவே சினிமாவில் இருக்கும் பிரபலங்கள் பலரும் பல லட்சக்கணக்கில் தொடங்கி கோடி கணக்கில் விலை மதிப்பான சொகுசு கார்களை வாங்குவது வழக்கமான ஒன்று.

-விளம்பரம்-

சொகுசு கார் வாங்கிய சாக்ஷி அகர்வால்:

அது அறிமுக நடிகர்கள் முதல் சூப்பர் ஹிட் பிரபலங்கள் வரை என பலரும் சொகுசு கார்களை வாங்குவார்கள். நம்ம தளபதி மட்டும் பல சொகுசு கார்களை வாங்கி இருக்காராம். அதற்கு மட்டும் பல லட்ச கணக்கில் வரி கட்டுகிறாராம். அந்த வகையில் நடிகை சாக்ஷி அகர்வால் சமீபத்தில் சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார். இதுகுறித்து சாக்ஷி அவர்கள் கூறியிருப்பது, சொகுசு கார் வாங்க வேண்டும் என்பது என்னுடைய தந்தையின் 45 வருட கனவாக இருந்தது. அந்த கனவை தற்போது நிறைவேறி இருக்கிறது.
மெர்சிடிஸ்-பென்ஸ் இ வகுப்பு காரினை நான் வாங்கியுள்ளேன். இது என்னுடைய வாழ்க்கையில் மகிழ்ச்சியான தருணம்.

சொகுசு கார் குறித்து சாக்ஷி அகர்வால் கூறியது:

மேலும், ஒரு நடிகையாக இந்த உலகத்தில் உள்ள ஒவ்வொருவரும் அவர்களின் சொந்த கனவுகளை நம்புவதற்கு தன்னுடைய இந்த வெற்றி உதவும். தன்னால் இதை செய்ய முடிந்தால் நிச்சயம் ஒவ்வொருவராலும் இது செய்ய முடியும் என்று சாக்ஷி அகர்வால் கூறி இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இவர் வாங்கிய காரின் விலை 65 லட்சம் முதல் 83 லட்சம் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. இதை பார்த்து ரசிகர்கள் பலரும் சாக்ஷி அகர்வாலுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர். மேலும், அரண்மனை 3 படத்தை தொடர்ந்து சாக்ஸி தற்போது ஆதிக் ரவிச்சந்திரனின் பகீரா, சமுத்திரக்கனியுடன் நான் கடவுள் இல்லை, தி நைட் உள்ளிட்ட பல படங்களில் நடித்துக் கொண்டுள்ளார். கூடிய விரைவில் இவருடைய படங்கள் எல்லாம் வெளியாக உள்ளது.

Advertisement