பாலாஜி குறித்து சனம் கூறிய சர்ச்சையான புகார் – பாலாஜியை காப்பாற்ற வீடியோவையே நீக்கிய விஜய் டிவி. என்ன எழுதியுள்ளார் பாருங்க.

0
110525
sanam
- Advertisement -

நேற்றய நிகழ்ச்சியில் பாலாஜி மற்றும் சனம் ஷெட்டிக்கு இடையிலான பிரச்சனை தான் கொஞ்சம் பரபரப்பாக பேசப்பட்டது. நேற்றைய நிகழ்ச்சியில் சனம் மற்றும் பாலாஜிக்கு ஒரு மிகப் பெரிய சண்டை வெடித்தது. போட்டியாளர்கள் அனைவரும் வெளியில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது பாலாஜி, சனம் ஷெட்டியை தருதலை என்றால் என்ன தெரியுமா என்று கேட்டார். அதற்கு சனம் ஷெட்டி தெரியாது என்று சொல்ல அது நீதான் என்று கூறியிருந்தார் பாலாஜி. இதனால் அங்கிருந்து சனம் ஷெட்டி கோபமாக எழுந்து வந்து விட்டாலர். அதன்பின்னர் சிறிது நேரம் கழித்து பாலாஜியிடம் ஏன் என்னை தறுதலை என்று கூறினாய் என்று சண்டையிட்டார் சனம் ஷெட்டி.

-விளம்பரம்-

பின்னர் இவர்கள் இருவருக்கும் இடையிலான சண்டை அதிகரித்தது,, ஒரு கட்டத்தில் பாலாஜி, சனம் ஷெட்டியை வாடி போடி என்று பேசும் அளவிற்கு மாறிவிட்டது. மேலும், சனம் ஷெட்டியிடம் என்னை பின்னால் ஏன் உதைத்தார் என்று பாலாஜி கேள்வி எழுப்பினார். ஆனால் சனம் செட்டி அது பிரச்சினை என்றால் அப்போதே கேட்டிருக்க வேண்டியதுதானே இப்போது வந்த என்னை உதைத்து கொள், இங்கேயே முடித்து விடலாம் என்று கூறியிருந்தார். இந்த பிரச்சினை தான் நேற்றைய நிகழ்ச்சியில் மிகவும் பெரிய பிரச்சினையாக இருந்தது.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் இன்று வெளியான முதல் ப்ரோமோவில் போட்டியாளர்கள் அனைவரும் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் யாரிடம் பிரச்சனை இருக்கிறதோ அதனை புகாராக எழுத வேண்டும் என்று பிக் பாஸ் அறிவித்து இருந்தார். மேலும், அப்படி குற்றம் சாட்டப்படும் போட்டியாளர்கள் இருவரையும் கூண்டுக்குள் நிற்கவைத்து நீதிபதியாக சுசித்ரா பஞ்சாயத்து செய்து வைத்திருக்கிறார். பாலாஜி மற்றும் சனம் ஆகி இருவரும் மாறி மாறி குற்றம் சாட்டி புகார்களை எழுதினர். ஆனால், அந்த ப்ரோமோவை நீக்கி இருக்கிறது விஜய் டிவி.

அதற்கு முக்கிய காரணமே சனம் ஷெட்டி எழுதிய புகாரில் பாலாஜி குறித்து எதோ சர்ச்சையான விஷயத்தை எழுதி இருப்பதால் தான் என்று கூறப்படுகிறது. சனம் ஷெட்டி எழுதிய கடிதத்தில் பாலாஜி,நான் டைட்டில் வின்னராக இருக்கும் பியூட்டி பேஜன்டுக்கு எதிராக அட்ஜஸ்ட்டமென்ட் மற்றும் காம்ப்ரமைஸ் என்ற வார்த்தையை பயன்டுத்தியதாகவும். யாரோ ஒரு மூன்றாம் நபர் சொன்ன ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்னுடைய நேர்மைக்கு களங்கம் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த விஷயம் வெளியானால் கண்டிப்பாக சமந்தபட்ட அந்த பியூட்டி பேஜன்ட் நிறுவனமும் அதில் பங்குபெற்ற அணைத்து பெண் போட்டியாளர்களும் பாலாஜிக்கு எதிராக குற்றம் சாட்ட வாய்ப்பு இருக்கிறது. எனவே, இதனை பெரிதாக்க விரும்பாமல் ப்ரோமோவையே நீக்கியது விஜய் டிவி.

-விளம்பரம்-
Advertisement