விலகிய பத்மபிரியா, கேள்வி கேட்ட சனம் – கமல் கட்சியில் சேர சொன்ன ரசிகருக்கு சனம் கொடுத்த பதிலடி.

0
1038
sanam
- Advertisement -

மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவராக இருந்த டாக்டர் மகேந்திரன்,கட்சியில் இருந்து விலகியதையடுத்து அந்த கட்சியில் இருந்து பல்வேறு நபர்கள் வெளியேறி வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் சட்ட மன்ற தேர்தலில் மக்கள் நீதி மையம் சார்பாக போட்டியிட்ட சென்னை தமிழச்சி என்ற புனைப்பெயர் கொண்ட பத்மப்ரியாவும் மக்கள் நீதி மையம் கட்சியில் இருந்து விள்குவதாக அறிவித்துள்ளார். நடந்து முடிந்த சட்ட மன்ற தேர்தலில் மதுரவாயல் தொகுதியில் மக்கள் நீதி மையம் சார்பாக போட்டியிட்டவர் பத்மப்ரியா.

-விளம்பரம்-

இதே தொகுதியில் அதிமுக அமைச்சர் பெஞ்சமின் போட்டியிட்டார்.ஆனால் அதைக் காட்டிலும் சென்னை தமிழச்சி பத்மபிரியா மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட்டதால் ஸ்டார் தொகுதி என்ற அந்தஸ்தை பெற்றது. இதனால் மதுரவாயல் தேர்தல் முடிவுகள் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. இப்படி ஒரு நிலையில் இந்த தொகுதியில் திமுக வேட்பாளர் கணபதி 31 ஆயிரத்து 231 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.

இதையும் பாருங்க : வற்புறுத்தும் சேனல்கள், கொரோனா பயத்தோடு ஷூட்டிங் செல்லும் சீரியல் நடிகர்கள் – ‘பூ’ பெயர் கொண்ட சீரியல் செட்டில் 30 பேருக்கு கொரோனா.

- Advertisement -

மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாக போட்டியிட்ட பத்மபிரியா 33,401 வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடம் பிடித்தார். நாம் தமிழர் கட்சி இந்த தொகுதியில் நான்காம் இடத்தை பிடித்தது. இப்படி ஒரு நிலையில் பத்மபிரியா மக்கள் நிதி மய்யம் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்து இருந்தார். இதனால் பலரும் கொஞ்சம் ஷாக்கில் ஆழ்ந்தனர்.

இப்படி ஒரு நிலையில் நடிகையும் பிக் பாஸ் முன்னாள் போட்டியாளருமான சனம் ஷெட்டி, மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகைவர்கள் குறித்து ட்வீட் ஒன்றை போட்டுள்ளார். எங்கே போனது உங்கள் நேர்மை ? உங்கள் அனைவருக்கும் என்னுடைய கேள்வி, நீங்கள் ஜெயிச்சு இருந்தாலும் கட்சியிலிருந்து விலகி இருப்பீர்களா ? அனைவருமே கமலஹாசனுக்கு மட்டும் துரோகம் செய்யவில்லை உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கும் நீங்கள் துரோகம் செய்து இருக்கிறீர்கள் என்று சாடி இருக்கிறார் சனம் ஷெட்டி.

-விளம்பரம்-

இதற்கு ரசிகர் ஒருவர்,நீங்கள் மிகவும் வலிமையான பெண். இந்த கடினமான நேரத்தில் நீங்கள் ஏன் கமல் கட்சியில் சேரக்கூடாது என்று கமன்ட் செய்து இருந்தார். இதற்கு பதில் அளித்த சனம் ஷெட்டி, உங்கள் யோசனைக்கு நன்றி, எந்த கட்சியில் இருக்கிறோம் என்பது முக்கியமில்லை. அரசியலில் இல்லாமலும் மக்களுக்கு பல சேவைகளை செய்ய முடியும் என்று கூறியுள்ளார்.

Advertisement