தற்போது சினிமா நடிகைகள் முகநூல் மற்றும் ட்விட்டரை விட இன்ஸ்டாகிராமில் தான் அதிகம் ஆக்டிவாக இருந்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் இன்ஸ்டாகிராமில் 2 மில்லியன் பாலோவர்களை கடந்து உள்ளார் நடிகை பூனம் பாஜ்வா. நடிகை பூனம் பாஜ்வா, 1989ஆம் ஆண்டு ஒரு பஞ்சாபி குடும்பத்தில் மும்பையில் பிறந்தார். இவருடைய அப்பா அமர்ஜீத் சிங் ஒரு கடற்படை அதிகாரி. இவருக்கு தயா என்ற தங்கை இருக்கிறார். பூனம் பாஜ்வா தனது பள்ளி காலம் முதலே மாடலிங் செய்து வருகிறார்.
12ஆம் வகுப்பு படிக்கும் போதே பார் டைமில் மாடலிங் செய்து வெப்த இவர், 2005ல் மிஸ் புனே பட்டம் வென்றார். அதன்பின்னர் ஒரு ராம்ப்வாக் பேஷன் ஷோவில் இவரது பெர்பாமன்ஸ் பார்த்துவிட்டு தெலுங்கு இயக்குனர் ஒருவர் இவரை படத்தில் நடிக்க வைத்தார்.2005 ஆம் ஆண்டு மொடாட்டி சினிமா ‘ஏமாற’ தெலுங்கு படத்தில் தனது 16 வயதில் 12ஆம் வகுப்பு படிக்கும் போது அறிமுகம் ஆனார்.
இதையும் பாருங்க : வடிவேலுவுடன் நடிச்சி பல வருஷமாச்சி, இருந்தாலும் ரெட் கார்ட் பிரச்சனையை தீர்த்து வைத்துள்ள டாப் நடிகர்.
அதன்பின்னர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்தார். தற்போது 29 வயதான இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.இறுதியாக இவர் தமிழ் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான ‘அரண்மனை 2’ மற்றும் முத்தின கத்திரிக்காய் போன்ற படங்களில் நடித்திருந்தார். அதன் பின்னர் இவருக்கு தமிழில் வாய்ப்புகள் அமையவில்லை. இறுதியாக தெலுங்கில் வெளியான என் டி ஆர் படத்தில் நடித்திருந்தார்.
சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் அம்மணி அடிக்கடி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இப்படி ஒரு நிலையில் இவர் நீச்சல் குளத்தில் குளித்த சில குளு குளு புகைப்படங்களை தனது இஸ்னாடாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள் பலர் புலம்பி வருகின்றனர். அதில் ஒருவர் தண்ணி கூட சூடாகி இருக்கும் என்று கமன்ட் செய்துள்ளார்.