இதனால் தான் மீரா மிதுன் இப்படி எல்லாம் பண்ணுது – தனது குசும்பில் பதில் சொன்ன சரவணன்.

0
2130
meera
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு நிறைவடைந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் பல்வேறு சர்ச்சையான விஷயங்கள் நடந்தேறியது. அதிலும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒயில்டு கார்ட் போட்டியாளராக கலந்து கொண்ட மீரா மிதுன் சர்ச்சையின் மொத்த உருவமாக இருந்து வந்தார். சொல்லப்போனால் இந்த சீசனில் வனிதாவிற்கு பின்னர் ரசிகர்களால் அதிகம் வெறுக்கப்ட்ட வெறுக்கப்பட்டது மீரா மிதுன் தான்.பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவருக்கு பிரபலத்தை விட அவப்பெயர் தான் அதிகம் கிடைத்து இதனால் எப்படியாவது ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்து விடலாம் என்று எண்ணிய மீராமிதுன் சமூகவலைதளத்தில் அடிக்கடி ஏதாவது சர்ச்சையான விஷயங்களை செய்து வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார்.

-விளம்பரம்-

இருப்பினும் அம்மனிக்கு பிரபலம் கிடைத்த பாடில்லை. அந்த வகையில் புகை பிடிப்பது, குடிப்பது , ஆண்களுடன் ஆபாச நடனம் போடுவது என்று என்னென்னவோ பதிவுகளை போட்டு பார்த்து விட்டார். இருப்பினும் அம்மனிக்கு பிரபலம் கிடைத்த பாடில்லை. இதனால் சமீபகாலமாக தமிழ் சினிமாவில் இருக்கும் பல்வேறு பிரபலங்கள் குறித்து தொடர்ந்து வம்பு இழுத்துக் கொண்டே வருகிறார். மேலும், தமிழ் சினிமாவில் மாஃபியா கும்பல் இருப்பதாகவும் கூறி வருகிறார். இப்படி ஒரு நிலையில் இவரை பற்றி நடிகரும் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளருமான சரவணன் கூறியுள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பல போட்டியாளர்கள் வெளியேறினாலும் சரவணன் மற்றும் மதுமிதாவின் வெளியேற்றம் தான் மிகவும் ரகசியமாக இன்னும் இருந்து வந்தது.

- Advertisement -

இதில் சரவணனின் வெளியேற்றம் தான் மிகவும் சர்ச்சையாக பார்க்கப்பட்டது.ஒரு எபிசோடில் கமலிடம், சிறு வயதில் தானும் பேருந்தில் பெண்களை உரசி இருக்கிறேன் என்று கூறி இருந்தது பெரும் சர்ச்சையாக மாறியது.ஒரு தேசிய தொலைக்காட்சியில் பெண்கள் குறித்து சரவணன் எப்படி இவ்வாறு சொல்லலாம் என்று பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சரவணனை பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வைத்தார் பிக் பாஸ்.இருப்பினும் மன்னிப்பு கேட்ட பின் சிறிது நாட்கள் கழித்து சரவணனை பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வலுக்கட்டாயமான வெளியேற்றினார்கள்.

வீடியோ 2 : 50 நிமிடத்தில் பார்க்கவும்

இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற சரவணனிடம் மீரா மிதுன் பற்றி கேட்கப்பட்ட போது, இப்பவும் நான் அவர்களுடன் பேசிக் கொண்டுதான் இருக்கிறேன். வெளியுலகத்தில் வேண்டுமானால் அவர் ஏதாவது கலாட்டா செய்யலாம். ஆனால், என்கிட்ட நன்றாக பேசுவார்கள், நன்றாக பழகுவார்கள் என்று சரவணன் கூறினார். பின்னர் மீரா மிதுன் பிக் பாஸ் மூலமாகத்தான் இவ்வளவு பிரபலமானவர்கள், ஆனால், தற்போது கமல் சார் பற்றியே இப்படி எல்லாம் பேசுகிறார் என்று கேள்வி கேட்கப் பட்டதற்கு ‘அதுகிட்ட லைட்டா ஒரு கிறுக்கு இருக்கிறது இதைப்பற்றி நீங்கள் அவளிடம் தான் கேட்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement