மூச்சுக்கு முன்னூறு முறை மரியாதை பற்றி பேசும் விசித்ரா, கானா பாலா வெளியில் செல்லும் போது என்ன செய்துள்ளார் பாருங்க.

0
180
- Advertisement -

தமிழில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 48 நாட்களை கடந்து இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப், பூர்ணிமா, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள். மேலும், முதல் நாளில் இருந்தே நிகழ்ச்சி அனல் பறந்து கொண்டு இருக்கிறது.

-விளம்பரம்-

அதேபோல் நிகழ்ச்சியில் இருந்து இதுவரை அனன்யா, பவா, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி, ஐஷு ஆகியோர் வெளியேறி இருக்கிறார்கள். அதோடு போன வாரம் பிரதீப் Red Card கொடுத்து வெளியேற்றப்பட்டார். காரணம், பிரதீப்பால் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று வீட்டில் இருந்த பெரும்பாலான பெண்கள் கமலிடம் முறையிட்டததால் அவரை வீட்டில் இருந்து வெளியேற்றினார் கமல். ஆனால், இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள்.

- Advertisement -

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிற்கு கேப்டனாக தினேஷ் தேர்வு செய்யப்பட்டார். பின் இந்த வாரம் பிக் பாஸ்- ஸ்மால் பாஸ் என்ற பிரிவு கிடையாது. இந்த வாரம் எல்லாம் ஒரே பிக் பாஸ் வீடுதான் என்று பிக் பாஸ் அறிவித்திருந்தார்.இது போட்டியாளர்கள் மத்தியில் சந்தோஷத்தை அளித்திருக்கிறது. ஆனால், சில பேருக்கு வருத்தம் என்று சொல்லலாம். பின் வீட்டில் வேலை செய்வதற்கு அணிகளை கேப்டன் ஆன தினேஷ் தேர்வு செய்திருந்தார். வழக்கம்போல் போட்டியாளர்கள் மத்தியில் சலசலப்பு சர்ச்சைகள் நடந்து கொண்டுதான் இருந்தது.

அதிலும் கடந்த வாரம் worst performerஆக விசித்ரா மற்றும் அர்ச்சனா தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆனால், இருவரும் சிறைக்கு செல்ல முடியாது என்று தர்ணா செய்தனர். இது ஒருபுறம் இருக்க கடந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனில் சரவண விக்ரம், பூர்ணிமா, ரவீனா, மணி, பிராவோ, அக்ஷயா, கானா பாலா ஆகியோர் இடம்பெற்றனர். இப்படி ஒரு நிலையில் நேற்றய நிகழ்ச்சியில் கானா பாலா வெளியேற்றப்பட்டார்.

-விளம்பரம்-

கானா பாலா, கமலிடம் பேசும் போது ரூல்ஸ் மீறுபவர்களுக்கு மட்டும் எதாவது நடவடிக்கை எடுங்கள் என்று பேசி இருந்தார். கானா பாலா அப்படி சொன்னது விசித்ராவை தான். ஏனெனில் கடந்த வாரம் சிறைக்கு செல்ல மறுத்ததோடு பல விதி மீறல்களை செய்து இருந்தார் விசித்ரா. கானா பாலா வெளியில் செல்லும் முன்னர் மற்ற எல்லா போட்டியாளர்களிடமும் கைகொடுத்து விடைபெற்றுக்கொண்டார்.

விசித்ரா மட்டும் சோபாவில் இருந்து எழவே இல்லை. கானா பாலா வந்து கைகொடுக்கும் போது கால் மேல் கால் போட்டு விசித்ரா அமர்ந்து கொண்டு கைகொடுத்தார். அப்போது போய்ட்டு வாங்க, நான் என்ன தண்டனை எனக்கு கொடுக்கப் போகிறார்கள் என்பதை கேட்டுக்கொள்கிறேன் என்று விசித்ரா சொன்னார். அப்போது ‘நான் உங்களை பற்றி சொல்லல, பொதுவாக சொன்னேன்’ என கானா பாலா விளக்கம் கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றார்.  

Advertisement