பிக் பாஸுக்கு சென்ற கண்ணன் ? பாண்டியன் ஸ்டோர்ஸ் நிலை என்ன ? ஐஸ்வர்யா வெளியிட்ட வீடியோ.

0
1247
- Advertisement -

பாண்டியன் ஸ்டோரில் சீரியலின் கடைசி நாள் ஷூட்டிங்கில் கண்ணன் எடுத்துக்கொண்ட வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் டிஆர்பியில் முன்னிலையில் வகுத்து வரும் சீரியல் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”. இந்த சீரியல் அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பாசக் கதையை மையமாக கொண்டது. இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட், ஹேமா ராஜ்குமார், லாவண்யா, குமரன் தங்கராஜன், சரவணன், தீபிகா என பல நடிகர்கள் நடிக்கிறார்கள்.

-விளம்பரம்-
pandianstores

அதோடு இந்த சீரியல் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக ஒளிபரப்பாகி வருகிறது. மேலும், இந்த சீரியல் ஆரம்பித்த நாளில் இருந்து இப்போது வரை விறுவிறுப்புடன் சென்று கொண்டு இருக்கிறது. தற்போது சீரியலில் தனம், முல்லை, ஐஸ்வர்யா ஆகிய மூவருக்கும் குழந்தை பிறந்து விடுகிறது. அது மட்டும் இல்லாமல் அனைவரும் எதிர்பார்த்த படி பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் புதிய வீட்டின் புகு மனை விழாவும் சமீபத்தில் தான் நடந்தது.

- Advertisement -

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்:

எல்லோருமே தங்களுடைய பெரிய வீட்டில் செட்டில் ஆகிவிட்டார்கள். தற்போது சீரியல் மீனாவின் அப்பாவை அவருடைய இரண்டாவது மாப்பிளை பிரசாந்த் கொலை செய்துவிட்டு அந்த பழியை கதிர், ஜீவா மீது போட்டு விடுகிறார். மீனாவும் அதை நம்பி தன்னுடைய அம்மா வீட்டிற்கு வந்து விடுகிறார். பின் ஒரு கட்டத்தில் பிரசாந்த் தான் இந்த கொலையை செய்கிறார் என்ற உண்மை மீனாவிற்கு தெரிய வருகிறது.

சரவண விக்ரம் குறித்த தகவல்:

இனி கதிர்- ஜீவாவை மீனா காப்பாற்றுவாரா? பிரசாந்த் தண்டிக்கப்படுவாரா? மீனாவின் அப்பா கண் விழிப்பாரா? போன்ற பல அதிரடி திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டிருக்கிறது. மேலும், இந்த சீரியலில் கண்ணன் என்ற கதாபாத்திரத்தில் சரவண விக்ரம் நடித்திருக்கிறார். இவர் டிக் டாக் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலமானவர். அதன் பின் தான் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தற்போது இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணனாக நடித்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சியில் சரவண விக்ரம்:

மேலும், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பரபரப்பாக சென்று கொண்டு இருக்கும் போது கண்ணன் சீரியல் இருந்து விலகி தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கிறார். இந்த நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் கடைசி நாள் ஷூட்டிங்கில் சரவண விக்ரம் எடுத்துக்கொண்ட வீடியோவை தான் அவருடன் நடித்த நடிகை தீபிகா பதிவிட்டு இருக்கிறார்.

கடைசி நாள் ஷூட்டிங்:

அதில் அவர் கண்ணனுடன் எடுத்துக்கொண்ட வீடியோவை பகிர்ந்து, உன்னை ரொம்ப மிஸ் செய்வேன் பையா சரவண விக்ரம் என்று கூறி இருக்கிறார். தற்போது இந்த வீடியோ வெளியானதை தொடர்ந்து பலரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முடிவடைகிறதா? இல்லை கண்ணன் கதாபாத்திரத்திற்கு பதில் வேறு ஒருவர் வருவாரா? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் கடந்த சில வாரங்களாகவே பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முடிய இருப்பதாக இணையத்தில் தகவல் வெளியாகி இருந்தது. ஆனால், அது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.

Advertisement