வார்த்தைய பாத்து யூஸ் பண்ணுங்க விஷ்ணு – பூர்ணிமாவிற்கும் விஷ்ணுவிற்கும் ஏற்பட்ட வாக்கு வாதம்.

0
493
- Advertisement -

கடந்த ஞாயிற்று்கிழமை அன்று படு கோலாகலமாக துவங்கியது பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் தற்போது 3 நாட்களை நிறைவு செய்து இருக்கிறது.இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு விஜய், ஜோவிகா விஜயகுமார், அக்ஷயா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றனர். தற்போது 18 பேர் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்று இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

மற்ற சீசன்களை போல இந்த சீனிலும் ரசிகர்களுக்கு பரிட்சியமான மற்றும் பரிட்சியமில்லாத போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர். மேலும், இந்த சீசனில் வித்தியாசமாக இரண்டு வீடுகளுடன் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. முதல் நாளே கேப்டன் பதவிக்காக சரியாக விவாதிக்காத பவா செல்லத்துரை, ரவீனா,நிக்ஸன்,ஐசு,அனன்யா, அக்ஷயா என்று 6 பேரை ஸ்மால் பாஸ் வீட்டிற்கு தேர்வு செய்தார்.

- Advertisement -

டென்ஷனான விசித்தரா :

மேலும், இந்த ஸ்மால் பாஸ் வீட்டில் இருப்பவர்களுக்கு எக்கச்சக்க ரூல்ஸ் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அந்த ரூல்ஸ்ஸை மீறியதாக விசித்ரா மற்றும் யுகேந்தத்திரன் ஆகிய இருவரையும் ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அனுப்பி வைத்தார் பிக் பாஸ். அப்போது பிரதீப் ‘இவர்கள் இருவருக்கும் பதிலாக வேறு இருவரை ஸ்மால் பாஸ் வீட்டில் இருந்து அனுப்பி வையுங்கள் என்று கூற உடனே டென்ஷன் ஆன விசித்திரா வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

பிரச்சனை செய்த பிரதீப் :

இதனை தொடர்ந்து கேப்டன் ஏன் இவர்கள் உதவி செய்ததை கேட்கவில்லை என்று விஜய்யுடம் பிரதீப் கேட்க அதுவும் அவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் சாப்பாடு விஷயத்தில் பிரதீப் சண்டை போட, போய் ரூல் புக்கை படியுங்கள் என்று விஜய் சொன்னார். உடனே பிரதீப்பும் ரூல் புக்கை கொண்டு வந்து படித்தார். ஆனால், அதில் அவர் சொன்ன ரூல்ஸ் இல்லை என்றதும் சரி ஓகே என்று பல்ப் வாங்கி கொண்டு அமர்ந்தார்.

-விளம்பரம்-

பிக் பாஸ் கொடுத்த டாஸ்க் :

இதனை தொடர்ந்து என்னிடம் டிஸ்கஸ் செய்யமல் எப்படி சாப்பாடு மெனு கொடுக்கலாம் என்று எனக்கு தனியாக சிக்கன் வேண்டும் என்று ஸ்மால் பாஸ் நபர்களிடம் வாக்குவாதம் செய்தார். ஆனால், அவர்களோ உங்களுக்கு எல்லாம் தனியாக சமைக்க முடியாது உங்கள் வீட்டு நபர்களுடன் டிஸ்கஸ் செய்து கொடுங்கள் நாங்கள் சமைக்கிறோம் என்றனர். இப்படி பலரிடமும் பிரதீப் நேற்று பிரச்சனை செய்துகொன்டே இருக்க டாஸ்க் கொடுத்து வீட்டின் பரபரப்பை கொஞ்சம் குறைத்தார்.

இன்றைய ப்ரோமோ :

இப்படியாக நேற்று எபிசோட் முடிய இன்று இரண்டாம் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் Know Your Housemate என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டு இருக்கிறது. . இதில் கூல் சுரேஷ் மற்றும் பூர்ணிமா ஆகியோர் விவாதித்து இருக்கின்றனர். அப்போது பூர்ணிமாவிற்கும் விஷ்ணுவிற்கும் சில வாக்கு வாதம் சென்றுள்ளது. இதனை தொடர்ந்து விஷ்ணுவிற்கும் பூர்ணிமாவிற்கும் சில வாக்குவாதங்கள் ஏற்பட்டு இருக்கிறது

Advertisement