பாசத்துல ஆரம்பிச்சி காதல்ல முடிக்கிறார்.! லீக்காண இன்றைய 4வது ப்ரோமோ.!

0
5637
Saravanan

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை எந்த ஒரு சர்ச்சையில் சிக்காமல் இருப்பது சரவணன் தான். தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவரான சரவணன் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று வருகிறார். ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் இவரை சித்தப்பு என்று அழைத்து மிகுந்த மரியாதையையும் வைத்து வருகின்றனர்.

நேற்றய நிகழ்ச்சியில் மீராவிற்கு குறும்படம் ஒன்று போடப்பட்டது. மேலும், அந்த குறும்படம் மூலம் சேரன் எந்த தவறும் செய்யவில்லை என்பதை உறுதி செய்தார் கமல். மேலும், மீராவிற்கு அறிவுரை வழங்கிய கமல், நீங்கள் இப்படியெல்லாம் குற்றச்சாட்டுகளை எல்லாம் வைத்தால், நீங்கள் பேருந்தில் எல்லாம் போகவே முடியாது.

இதையும் பாருங்க : சாண்டிக்கும் சேரன் மகளுக்கு இது தான் சம்மந்தமாம்.! இது தான் சாண்டிக்கு காண்டா?

- Advertisement -

அதில் பெண்களை உரசுவதற்கு என்றே சிலர் வருவார்கள் என்று கூறினார். இதற்கு சரவணன் ‘நானும் காலேஜ் படிக்கும் பொது செஞ்சி இருக்கேன் சார்’ என்று கூறினார். சரவணன் கூறிய இந்த விஷயம் இணையத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இன்றய நிகழ்ச்சிக்கான 4 வது ப்ரோமோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதில் சரவணன் , தனது மகன் மற்றும் இரண்டு மனைவிகளை காண்பிக்குமாறு கமலிடம் கேட்க அதற்கு கமல், பாசத்தில் ஆரம்பித்து காதலில் முடிக்கிறார் என்று கிண்டலடிக்கிறார்.

-விளம்பரம்-
Advertisement