எல்லாரும் லைவ் பாக்க முடியாது, இப்படி எல்லாம் பண்ணாத – சரவணனின் தங்கை வெளியிட்ட உருக்கமான வீடியோ

0
117
- Advertisement -

தனது அண்ணன் ட்ரோல் செய்யப்படுவது குறித்து விக்ரமனின் தங்கை வெளியிட்டு இருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் பரீச்சயமான நபர்களில் ஒருவர் சரவணன் விக்ரம். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருந்தார். தற்போது சமீபத்தில் தான் இந்த சீரியல் முடிவடைந்தது. அதோடு இவர் சோசியல் மீடியாவில் படு ஆக்ட்டிவாக இருக்கிறார். தற்போது இவர் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கிறார்.

-விளம்பரம்-

இவர் மீது ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்ப்போடு இருந்தார்கள். ஆனால், நிகழ்ச்சி தொடக்கத்தில் இருந்து இப்போது வரை சரவணன் பெரிதாக எந்த ஒரு சுவாரஸ்யமான விஷயத்தையும் செய்யவில்லை. மற்ற போட்டியாளர்கள் சண்டை போட்டாலும் கூட அதில் அவர் ஈடுபடவும் இல்லை, கமெண்ட்ஸ் சொல்வதும் இல்லை. அமைதியாக நின்று வேடிக்கை பார்த்துவிட்டு வந்து விடுகிறார். இதனாலே பிக் பாஸ் ரசிகர்கள் இவரை கிண்டலடித்து விமர்சித்திருந்தார்கள்.

- Advertisement -

இவர் மீது ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்ப்போடு இருந்தார்கள். ஆனால், நிகழ்ச்சி தொடக்கத்தில் இருந்து இப்போது வரை சரவணன் பெரிதாக எந்த ஒரு சுவாரஸ்யமான விஷயத்தையும் செய்யவில்லை. மற்ற போட்டியாளர்கள் சண்டை போட்டாலும் கூட அதில் அவர் ஈடுபடவும் இல்லை, கமெண்ட்ஸ் சொல்வதும் இல்லை. அமைதியாக நின்று வேடிக்கை பார்த்துவிட்டு வந்து விடுகிறார். இதனாலே பிக் பாஸ் ரசிகர்கள் இவரை கிண்டலடித்து விமர்சித்திருந்தார்கள்.

இந்த வீடியோ சோசியல் மீடியாவில் கேலிக்குள்ளாகி இருந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் கூட தனது ரசிகர்கள் ஞாபகம் வந்துவிட்டதாக இவர் சொன்னது கேலிக்கு உள்ளானது. அவ்வளவு ஏன், பிக் பாஸே கூட இவரை அடிக்கடி போய் கதவை மூடிவிட்டு வருமாறு மொக்கை கொடுத்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் தனது அண்ணன் ட்ரோல் செய்யப்படுவது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார் சரவண விக்ரமனின் தங்கை சூர்யா.

-விளம்பரம்-

அந்த வீடியோவில் பேசி இருக்கும் அவர் ‘பிக் பாஸ் நிகழ்ச்சியை யாரும் முழுதாக பார்க்கும் அளவிற்கு நேரம் இருக்காது பாதி பேர் நீங்கள் போடும் மீம்ஸ் மற்றும் டவுன்களை வைத்து தான் பிக் பாஸில் இப்படித்தான் போய்க்கொண்டு இருக்கிறது என்று நம்புவார்கள். அதனால் ஒருவரை பற்றி போடும் போது கவனமாக போடுங்கள். அதே போல என் அண்ணன் அவங்க ஃபேன்ஸ் பற்றி ஷேர் பண்ணியிருந்தாங்க. அதை எடுத்து `யாருப்பா இவங்க ஃபேன்ஸ்’ என்கிற மாதிரியெல்லாம் அதையுமே ரொம்ப ட்ரோல் பண்ணி போட்டிருந்தீங்க.

பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணனாக இருக்கும் போது அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்து இருக்கிறார்கள் என்பது உண்மைதான். எங்கப் போனாலும் அவங்களை அடையாளம் கண்டுபிடிக்கிற அளவுக்கான ஃபேன் பேஸ் அவங்களுக்கு இருந்தது. இப்பவும் அவருக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். என் அண்ணனுக்காக மட்டும் சொல்லவில்லை அனைத்து போட்டியாளர்களுக்கும் சேர்த்து தான் நான் சொல்கிறேன் ஒருவரை பற்றி சொல்லும் போது பாசிட்டிவாக சொல்ல முடிந்தால் சொல்லுங்கள் முடியவில்லை என்றால் நெகட்டிவ் விஷயங்களை கூட சொல்லலாம். ஆனால், நெகட்டிவ் விஷயத்தை உருவாக்கி பொய்யான விஷயத்தை பரப்பாதீர்கள் என்று இருக்கும் இடம் பேசி இருக்கிறார்

Advertisement