பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் நேற்று அறிவிக்கபட்டது. இந்த வார நாமினேஷனில் வனிதா, சரவணன், மதுமிதா, சரவணன், மீரா, மோகன் வைத்யா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த வாரம் வனிதா தான் வெளியேற்றபட வேண்டும் என்று பெரும்பாலா ரசிகர்கள் விரும்பினாலும். அவர் இத வாரம் கண்டிப்பாக பிக் பாஸ்சால் காப்பாற்றுபட்டுவிடுவார் என்பது நேற்றய டாஸ்கில் இருந்தே தெரிந்தது.
வனிதா வெளியேறினால் பிக் பாஸ் வீட்டில் பாதி பிரச்னையும் ஓய்ந்து விடும், இதனால் நிகழ்ச்சியில் சுவாரசியமும் குறைந்து விடும் என்பதால் வனிதா இந்த வாரம் கண்டிப்பாக வெளியேற மாட்டார் என்பதே ஆணித்தனமான உண்மை. வனிதாவை காப்பாற்ற வேண்டும் என்பதர்க்காகவே ரசிகர்களை குழப்ப வேண்டும் என்பதற்காக மதுமிதா, மீரா ஆகியோரை எலிமினேஷன் லிஸ்டில் சேர்த்துள்ளார் பிக் பாஸ். எனவே, ரசிகர்களுக்கு யாருக்கு வாக்களிக்க போக வேண்டும் என்ற குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் பாருங்க: பணம் சம்பாதிக்க இப்படி ஒரு கேவலமான போஸ்ஸா.! யாஷிகாவை கழுவி ஊற்றிய ரசிகர்கள்.!
அதே போல நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் வனிதாவை காப்பாற்ற வேண்டும் எப்பதற்காகவே வனிதாவிற்கு மிகவும் சுலபமான டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதில் வனிதா வெற்றிகரமாக செய்தும் முடித்தார். ஒருவேளை இந்த வாரம் வனிதா வெளியேற்றபடவில்லை என்றால் டாஸ்க்கை சிறப்பாக செய்தற்காக அவருக்கு எதாவது சூப்பர் பவரும் கிடைக்கலாம்.
இந்த பவரை வைத்து அவர் அடுத்த வார நாமினேஷனில் இருந்து தப்பிக்கவும் பிக் பாஸ் அறிவித்தாலும் அதில் ஆச்சர்யபடுவதற்கு ஒன்றும் இல்லை. ஒரு வேலை வனிதா இந்த வாரம் வெளியேறவில்லை என்றால் அவர் இனி வரும் ஒரு சில வாரத்திற்கு நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட மாட்டார் என்பதும் உறுதி.
நேற்றைய நிகழ்ச்சியில் வனிதாவிற்கு கொலைகாரி என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதில் ஒரு டாஸ்க் சாக்க்ஷியை அவர் கையாலேயே மேக்கப்பை கலைக்கசெய்ய வேண்டும். மற்றொரு டாஸ்க் மோகன் வைத்யாவை மைக்கல் ஜாக்சன் பாட்டிற்கு நடனமாட வைக்க வேண்டும் என்பது தான்.
அப்படி செய்துவிட்டால் இந்த கொலைகாரன் டாஸ்க் நிறைவடைந்து விடும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், இதில் வனிதா மற்றும் முகன் தான் கொலைகாரர்கள் என்பது மற்ற ஹோஸ்மேட்ஸ்களுக்கு தெரியாது. இருப்பினும் இந்த டாஸ்கை வெற்றிகரமாக செய்து முடித்தார் வனிதா.
இந்த டாஸ்கில் மோகன் வைத்யா கொலை செய்யபட்ட போது சாண்டி வழக்கம் போல கலாய்த்துக்கொண்டிருந்தார். அப்போது ‘அவரை 4 நாள் விட்டு இருந்தால் அவரே போய் இருப்பாரே ‘ என்று கூறினார் சாண்டி. ஆனால், சாண்டி இதனை விளையாட்டா சொன்னாரோ இல்லை சீரியசாக சொன்னாரோ. இந்த வாரம் வெளியேற போவது மோகன் வைத்யா தான் என்று நம்பகரமான தகவல் வெளியாகியுள்ளது.